பெருகும் ஆதரவு.. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக அகில இந்திய தொழிற்சங்கங்கள் உண்ணாவிரதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாளை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்களை உடனே வழங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் 7வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக டிரைவர்களை கொண்டு, பஸ்களை இயக்கி வருகிறது அரசு.

All Indian unions have announced that they will take part in the fasting

இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாளை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். தொழிலாளர்களுக்கு ஆதரவு பெருகியுள்ளதால் இந்த பிரச்சினையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திர்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
All Indian unions have announced that they will take part in the fasting in support of transport employees.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற