பெண்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருப்பூரில் அனைத்துக்கட்சி சார்பி போராட்டம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜனையும் அவர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசையும் கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் அண்மையில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் சரமாரியாக தடியடி நடத்தினர்.

All parties were conducting protest in Tirupur against the lahti charge

பெண்கள் என்றும் பாராமல் விரட்டி விரட்டி தடியால் அடித்தனர். இதில் பலர் படுகாயமடைந்தனர். மேலும் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை கையால் ஓங்கி அறைந்தார். இதனைக்கண்டித்து திருப்பூரில் அனைத்துக்கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
All parties were conducting protest in Tirupur against the lahti charage on the public who were protetsing against tasmac.
Please Wait while comments are loading...