உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி.. காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து இருக்கிறார்.

சென்னையில் ஒவ்வொரு கட்சி அலுவலகத்திலும் தற்போது கட்சி பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக நடத்திய கூட்டம் தற்போதுதான் நடந்து முடிந்தது. அதேபோல் மதிமுக கூட்டமும் நடந்து முடிந்து இருக்கிறது.

Alliance with DMK will continue - Congress committee

நாளை சட்டசபை கூட இருப்பதால் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மதிமுக கூட்டத்தில் திமுக கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று முடிவாகி இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர் ராமசாமி தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.

இதில் திமுக கட்சியுடன் எப்போதும் போல கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி நடைபெறும் என்று காங்கிரஸ் முடிவு செய்து இருக்கிறது.

இதற்கான அறிவிப்பை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டார். இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress members conference held in Chennai. Congress assembly head K.R. Ramasamy leads the meeting. They will discuss about tomorrow assembly in the meeting. In the meeting they have decided that alliance with DMK will continue in civic poll of Tamil Nadu.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற