சேலத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரை மறித்து கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் கண்ணங்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பணிக்குச் செல்ல வீட்டை விட்டு வெளியே கிளம்பினர். அப்போது அவரை வழிமறித்த சிலர் அவரை கத்தியால் சரமாரியாகக் குத்தினர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

Ambulance driver killed by unknown persons in Salem

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்த்தீபனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலைக் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பட்டப்பகலில் நடந்த சம்பவம் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்தது.

தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் நிலையற்ற அரசியல் சூழ்நிலை நிலவிவருவதும் இச்சீர்கேட்டுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Salem Kannaguruchi, Ambulance driver killed by unknown persons and police is inquiring the case.
Please Wait while comments are loading...