பிக்பாஸ்.. பரணி மீது மோசமாக குற்றம்சாட்டி வெளியேற்றியது தவறு.. சின்னத்திரை நடிகர் போர்க்கொடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரணி பெண்களோடு நன்கு பழகக் கூடியவர் என்று, சின்னத்திரை நடிகர் அமித் பார்கவ் தெரிவித்துள்ளார்.

பெண்களிடம் மோசமாக நடந்துகொள்பவர் என்று குற்றம்சாட்டி, பிக்பாஸ் வீட்டிலிருந்து பரணியை சில தினங்கள் முன்பு வெளியேற்றினர். இது பரணியை சார்ந்தோருக்கும், ரசிகர்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, பேஸ்புக் லைவ் மூலம் அமித் பார்கவ் தனது கருத்தை கூறியுள்ளார்.

 சக போட்டியாளர்

சக போட்டியாளர்

அவர் கூறியதாவது: 2016ல் அச்சம் தவிர் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். பரணி என்னுடன் சக போட்டியாளராக இருந்தார். அந்த ஷோ சில வாரங்கள் நடந்தன. ஒரு சில வாரங்கள் நான் இருந்தேன். அப்போது பரணியுடன் பழகியிருந்தேன். அவரை பற்றி ஓரளவுக்கு தெரியும்.

 பெண்களிடம் மதிப்புள்ளவர்

பெண்களிடம் மதிப்புள்ளவர்

பரணியின் பிற விஷயங்களை பற்றி பேசவிரும்பவில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரணி உள்ள வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என கூறினர். அது ரொம்ப தப்பான விஷயம். பரணி பெண்கள் விஷயத்தில் ரொம்பவே மரியாதையாக நடந்துகொள்வார். அவர் மரியாதையை கொச்சைப்படுத்துவது எனக்கு பிடிக்கவில்லை. ஏன் அப்படி சொன்னார்கள் என தெரியவில்லை.

 எனக்கு தெரியும்

எனக்கு தெரியும்

இதுவரை யாரைப்பற்றியும் மரியாதை குறைவாக பரணி பேசியதேயில்லை. பரணி என்னுடைய நண்பரா இல்லையா என்பதை சரியாக சொல்ல முடியாது. ஆனால் பரணி பற்றி எனக்கு தெரியும்.

மரியாதை போச்சு

பரணிக்கு பெண்களிடம் எப்படி மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது நன்றாக தெரியும். இனிமேல் பரணி, குடும்பத்தோடு சாலையில் நடந்து போனால் அவரைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Television actor Amit Bhargav lends his support to BiggBossTamil contestant Bharani who left the house after trying to escape.
Please Wait while comments are loading...