காஷ்மீர் சிறுமி பலாத்காரம்.. விமர்சனத்தை கிளப்பிய வைரல் டப்மாஷ் அதிரடி நீக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம்-கேரளாவில் எதிர்ப்பு

  சென்னை: காஷ்மீரில் 8 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இளம் பெண் ஒருவர் செய்துள்ள டப்மாஷ் வரவேற்பையும், விமர்சனங்களையும் ஒருசேர பெற்றது.

  காஷ்மீரில் 8 வயது சிறுமி பலரால் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடே நீதி கேட்டுக்கொண்டுள்ளது. எளிதில் எதற்கும் கருத்து கூறாத, பிரதமர் மோடியும், இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்துவிட்டார். குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி என அறிவித்துள்ளார்.

   An young girls dubmash on Kashmir girl rape

  இந்த நிலையில், டப்மாஷ் ஒன்று வைரலாகியுள்ளது. ஒரு இளம் பெண், பின்னணி இசையுடன் நடித்து பாலியல் சம்பவத்தை கண்முன் கொண்டு வருவதை போல உள்ளது அந்த டப்மாஷ்.

  இது வைரலாகியுள்ள போதிலும், பாராட்டுகளோடு சேர்த்து, இதன் மீது விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன. தனிப்பட்ட புகழுக்காக சிறுமி பலாத்கார சம்பவத்தை பயன்படுத்துவதா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பாமல் இல்லை.

  சிலரோ, நடந்த சம்பவத்தை நெற்றி பொட்டில் அடிப்பதை போல இருப்பதால் இந்த வீடியோ தற்போதைய நிலையில் தேவைதான் என்கிறார்கள். ஆனால் சர்ச்சை காரணமாக அந்த வீடியோ இப்போது இணையத்தில் இருந்து அகற்றப்பட்டு உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  An young girl's dubmash on Kashmir girl rape goes viral.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற