பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு... நண்பன் கருணாநிதிக்கு வாழ்த்து சொல்லிய அன்பழகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 14வது சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க கிளம்பும் தனது ஆருயிர் நண்பரும், தலைவருமான கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்.

அரசியல் வட்டாரத்தில் மிக நீண்ட நெடிய நட்பு கருணாநிதி - அன்பழகனுடையது. பலரும் கூட நட்புக்கு இவர்களையே உதாரணமாக காட்டுவார்கள். அப்படி ஒரு பாண்டிங் இவர்களுக்கிடையே இருக்கிறது.

Anbalgan wishes Karunanidhi

காலம் வேகமாக ஓடி விட்டாலும் கூட இவர்களது நட்பு என்றும் 16 என்ற அளவிலேயே இருக்கிறது. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி தனது 14வது சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கிறார். திருவாரூரில் 2வது முறையாக போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் பிரசாரத்தை நாளை அவர் தொடங்குகிறார்.

இதையடுத்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் இன்று கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்தி மகிழ்ந்தார். நண்பன் வந்து வாழ்த்திய சந்தோஷத்தில் கருணாநிதியின் முகம் தூள் திவ்யா ரேஞ்சுக்கு பிரகாசமாகி விட்டது. முகம் முழுவதும் புன்னகையுடன் அன்பழகனுடன் பேசி மகிழ்ந்தார்.

கருணாநிதியை விட வயதில் மூத்தவரான அன்பழகன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவெக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK general secretary Anbalagan met his friend and party chief Karunanidhi and greeted him for launching his poll campaign tomorrow.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற