அன்று பூதக்கண்ணாடி வச்சு பாருங்க எனக் கூறிய அண்ணாமலை.. இப்போ “என் பின்னாடியே ஏன் வர்றீங்க” என கோபம்!
கோவை: மீடியாக்காரங்க பூதக்கண்ணாடி போட்டு என் பிரச்சாரத்தை கவனிங்க என கோவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கூறிய அண்ணாமலை, தற்போது, "ஏன் என் பின்னாடியே வந்து பிரச்சாரத்தை டிஸ்டர்ப் பண்றீங்க" என செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கோவை லோக்சபா தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக சார்பாக முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பாக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் களமிறங்குகின்றனர். மும்முனை போட்டியால் கோவை தேர்தல் களம் பரபரத்து வருகிறது.

அண்ணாமலை அன்று பேசியது: கோவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த அண்ணாமலை, "ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட நாங்கள் தர மாட்டோம். மக்களை நம்பி, கோவையில் மாற்றம் ஆரம்பமாக வேண்டும் என நம்பி இங்கு போட்டியிடுகிறேன். தமிழக முதல்வரே இங்கு வந்து உட்கார்ந்தாலும் பாஐக வெற்றி பெறும்.
நீங்கள் பூதக்கண்ணாடி போட்டு பார்த்தாலும் நான் எந்த காசையும் செலவு செய்ய மாட்டேன். தமிழகத்திலேயே செலவு குறைந்த தேர்தலாக கோவை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் இருக்க வேண்டும் என்ற சங்கல்பத்துடன் வேட்பாளராக வந்துள்ளேன். தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற ஒரு தேர்தல் செலவு இல்லாமல் நடத்த வேண்டும்.
அடுத்த 40 நாட்களும் என்னுடைய பிரச்சாரத்தை பாஜகவின் பிரச்சாரத்தை நன்றாகக் கவனியுங்கள். நாங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறோமா என பாருங்கள். கோவையில் மீடியாக்காரங்க பூதக்கண்ணாடி போட்டு என் பிரச்சாரத்தை கண்காணியுங்கள்" என்று வீராவேசமாகப் பேசி இருந்தார் அண்ணாமலை.
அண்ணாமலை பிரச்சாரத்தில்: தொடர்ந்து அண்ணாமலை கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அந்தவகையில் பல்லடம் பகுதியில் அண்ணாமலை நேற்று காலை தனது பிரச்சார வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, தனியார் செய்தி தொலைக்காட்சி வாகனம், அண்ணாமலையின் பிரச்சார வேனுக்கு முன்பாக சென்றபடி, அண்ணாமலை பிரச்சார பயணத்தை ஒளிப்பதிவு செய்து வந்தது.
அண்ணாமலை பிரச்சாரத்தை கவர் செய்வதற்காக செய்தி வாகனம் தனது வாகனத்திற்கு முன்பாகவே சென்று கொண்டிருந்ததால், டக்கென ஓவர்டேக் செய்து செய்தி தொலைக்காட்சி வாகனத்தை வழிமறித்தார் அண்ணாமலை. வேனில் இருந்து கீழே இறங்கி செய்தியாளர்களை நோக்கி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் அண்ணாமலை.
அண்ணாமலை தற்போது பேசியது: "என் தேர்தல் பிரச்சாரத்தை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க? நான் மக்களை பார்க்க வந்திருக்கேன். மீடியாவை பார்க்க வரல. என்ன இடைஞ்சல் பண்ணிட்டு இருக்கீங்களா? என் பிரச்சாரத்தின்போது உடன் வந்தால் ஒரு காருக்கு 8 ஆயிரம் ரூபாய் சேர்ப்பாங்க தேர்தல் ஆணையம். நீங்க ஏன் என் பிரச்சாரத்துக்கு உள்ள வர்றீங்க?" என ஆவேசமாகப் பேசினார்.
அதோடு, சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் மேலதிகாரிகளுக்கும் போன் செய்த அண்ணாமலை, "நான் பல்லடத்தில் இருக்கேன். உங்க நியூஸ் சேனல் ரிப்போர்ட்டர்ஸ் இங்கே ரொம்ப அட்டூழியம் பண்ணிட்டு இருக்காங்க. ரொம்ப ஓவரா போறாங்க. பிரச்சாரத்துக்கு பெரிய தொந்தரவா இருக்காங்க. போக்குவரத்து நெரிசலை உண்டாக்குறாங்க.. நான் அப்புறம் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் செய்ற மாதிரி ஆகிடும்" என மிரட்டும் தொனியில் பேசினார்.
மாற்றி மாற்றி பேசுறாரே: தொடர்ந்து செய்தியாளர்களிடம் கோபமாகப் பேசிய அண்ணாமலை, "என்கிட்ட இந்த வேலை எல்லாம் வச்சுக்க கூடாது. 3 முறை வார்னிங் கொடுத்தேன்ல. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கணும். இந்த பழக்கம் எல்லாம் எங்ககிட்ட வச்சுக்காதீங்க. மக்கள் ஓட்டு போடுறாங்க.. நான் மக்களை பாக்குறேன். நீங்க உங்க டிவியில் போட்டு தான் அவங்க ஓட்டு போடணும்னு இல்ல. உங்களை யாரு வரச் சொன்னது? எல்லாம் ஒரு லிமிட் தான்" என ஆவேசமாகப் பேசினார்.
இதனால் செய்தியாளர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டு கோவை வந்ததுமே, "மீடியாக்காரங்க பூதக்கண்ணாடி போட்டு என் பிரச்சாரத்த கண்காணிங்க. ஒரு ரூபாய் கூட செலவழிக்க மாட்டேன்" என்று கூறிய அண்ணாமலை, தற்போது செய்தி சேகரிக்கச் சென்றவர்களை, "ஏன் என் பிரச்சாரத்தை டிஸ்டர்ப் பண்றீங்க. என் கூட எதுக்கு வர்றீங்க. நீங்க கவர் பண்ணி எனக்கு ஓட்டு போடப் போறாங்களா" என கடிந்து கொண்டிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
-
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications