For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேரறிவாளனுக்கு பரோல் - முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்ன அற்புதம்மாள்

பேரறிவாளனை பரோலில் விடுவித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: என் மகன் என்னுடனே இருக்க வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் 30 நாட்கள் பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நன்றி கூறினேன் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த வாரம் பரோலில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு தமிழக அரசு 30 நாட்கள் பரோல் அளித்துள்ளது.

Arputhammal thanks to Chief Minister Edapadi Palanisamy

இதனையடுத்து வேலூர் சிறையில் இருந்து சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார் பேரறிவாளன். அவரை உறவினர்கள், நண்பர்கள் சந்தித்துபேசி வருகின்றனர்.

இதனிடையே சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசியுள்ளார். பேரறிவாளனை பரோலில் விடுவித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், என் மகனை பரோலில் விடுவித்த முதல்வருக்கு நன்றி கூறியதாக தெரிவித்தார். தனது மகன் தன்னுடனே இருக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் இப்போது 30 நாட்கள் மட்டுமே தன்னுடன் இருக்க அரசு அனுமதித்துள்ளது. அவருக்கு உடல் பரிசோதனைகள் செய்து வருகிறோம்.

பரோல் கொடுத்த முதல்வரை சந்தித்து நன்றி கூறியதாகவும் அற்புதம்மாள் தெரிவித்தார்.

English summary
For Arputhammal, who waged a long battle to save her son and one of the convicts in the Rajiv Gandhi assassination case A.G. Perarivalan, she went secretariate met to thanks Chief Minister Edapadi Palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X