For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ., விரைவில் குணமடைய அருண் ஜெட்லி, அமித் ஷா வாழ்த்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலமடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதியன்று இரவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை விரைவில் குணமடைய வேண்டும் என தேசிய கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

Arun Jaitley, Amit Shah wished Jaya speedy recovery

இதனிடையே, அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்ற பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். மருத்துவர்கள், தமிழக மூத்த அமைச்சர்களிடம் பேசிய அவர்கள், மருத்துவமனையை விட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்திக்காமலேயே சென்று விட்டனர்.

ஜெட்லி வாழ்த்து

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனைக்கு தான் சென்றதாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய தான் வாழ்த்துவதாகவும் அருண் ஜெட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷா வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா பூரணமாக குணமடைய பிரார்த்திக்கிறேன் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனைக்குச் தான் சென்றதாகவும், ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

English summary
Union Finance Minister, Arun Jaitley and BJP's National President Amit Shah today visited the Appolo hospital in Chennai where Tamil Nadu Chief Minister, J Jayalalithaa has been admitted. Both leaders after visiting the hospital wished her a speedy recovery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X