இழுபறிக்கு பின் அஸ்வினியின் உடலை வாங்கிய உறவினர்கள்.. போரூரில் தகனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நான் காதலிக்க மறுத்தேன் - அழகேசன் பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ

  சென்னை: கே.கே. நகரில் கொல்லப்பட்ட மாணவி அஸ்வினியின் உடல் போரூரில் தகனம் செய்யப்பட்டு இருக்கிறது.

  சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினி என்ற அதே கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்த மாணவியை அழகேசன் கழுத்தையறுத்து கொலை செய்தார். தற்போது அழகேசன் கைது செய்யப்பட்டுள்ளான்.

  Ashwini's Parents refuses to bring her body from the Government hospital

  ஒருதலை காதலால் ஏற்றுக்கொள்ளாததால் அஸ்வினி கொல்லப்பட்டு இருக்கிறார். தமிழகம் முழுக்க இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

  இந்த நிலையில் கே.கே. நகரில் கொல்லப்பட்ட மாணவி அஸ்வினி உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

  அஸ்வினி உடல் காலை 9.30 மணிக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

  முதலில் அஸ்வினி உடலை வாங்க பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள். உறவினர்கள் மருத்துவமனை வாசலில் உடலை வாங்க மறுத்து போராடி வந்தார்கள்.

  போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உடலை பெற்றுக் கொண்டனர். கொலைகாரன் அழகேசன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

  இந்த நிலையில் மாலை 5 மணிக்கு அஸ்வினியின் இறுதி ஊர்வலம் நடந்தது. தற்போது அவரது உடல் போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  College girl Ashwini murdered in Chennai by man named Azhagesan. This issue creates huge fire in Tamilnadu. Ashwini's Parents refuses to bring her body from the Government hospital.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற