ஸ்டாலினுடன் அழகிரி திடீர் சந்திப்பு! விரைவில் செயல்தலைவர் அறிவிப்பு வெளியாகிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் நீக்கப்பட்ட மு.க. அழகிரி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியான நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. அப்போது ஸ்டாலின், அவரது சகோதரி செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது பின்வாசல் வழியாக அழகிரியும் அவரது மனைவி காந்தி அழகிரியும் வீட்டுக்குள் நுழைந்தனர். இதை சற்றும் ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை.

கருணாநிதியுடன் ஆலோசனை

கருணாநிதியுடன் ஆலோசனை

பின்னர் கருணாநிதியுடன் அழகிரி, ஸ்டாலின், செல்வி, காந்தி அழகிரி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிந்ததும் பின்வாசல் வழியாகவே அழகிரி கிளம்பிவிட்டார்.

2 ஆண்டுக்கு முன்னர்...

2 ஆண்டுக்கு முன்னர்...

2 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டாலின், 3 மாதங்களில் இறந்துவிடுவார் என கருணாநிதியிடம் அழகிரி கூறியிருந்தார். இதில் கோபமடைந்த கருணாநிதி, அழகிரியை திமுகவை விட்டே டிஸ்மிஸ் செய்தார்.

மீண்டும் சந்திப்பு

மீண்டும் சந்திப்பு

இதன் பின்னர் நீண்டகாலம் கருணாநிதியை நேரில் சந்திக்காமல் இருந்தார் அழகிரி. கடந்த சில வாரங்களாக அவர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.

செயல் தலைவராக ஸ்டாலின்?

செயல் தலைவராக ஸ்டாலின்?

மேலும் தாம் அரசியலிலேயே இல்லை எனவும் முக அழகிரி கூறி வருகிறார். அத்துடன் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்றைய ஆலோசனையில் இது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என கோபாலபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்படும் அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Union Minister MK Azhagiri today met his father DMK leader Karunanidhi and his brother MK Stalin in Chennai.
Please Wait while comments are loading...