For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரியை சாய்த்து அவர் மீது விஜயகாந்துக்கு சிவப்புக் கம்பளமா? கொதிக்கும் ஆதரவாளர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கடந்த 2000-ம் ஆண்டு மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, மதுரையை ரண களப்படுத்தினர். இத்தனைக்கும் அப்போது அழகிரி எந்தப் பொறுப் பிலும் இல்லை. இப்போது தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

மதுரைப் பக்கம் எந்தச் சலனமும் இல்லை. அழகிரியைவிட கட்சியும் பதவியும் முக்கியம் என சொல்லாமல் சொல்லி இருக்கிறது மதுரை தி.மு.க.

Azhagiri

மிசா பாண்டியன்

அழகிரி மீதான நடவடிக்கை குறித்து அவரது விசுவாசிகள் சிலரிடம் கருத்துக் கேட்டோம். மிசா பாண்டியன் (மதுரை மாநகர் முன்னாள் பொருளாளர்): "தலைவரைச் சந்திச்சுட்டு அண்ணன் கோபமாக வந்தார்னு சொன்னாங்க. என்ன ஏதுன்னு எதுவும் தெரியலை. விஜயகாந்த்துடனான கூட்டணிக்காகவே, அண்ணன் மீது நடவடிக்கை எடுத்தி ருக்கிறார்கள் என்று புரிகிறது. அண்ணனை வீழ்த்தி அவர் மீதே விஜயகாந்த்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறார்கள்''.

கட்சி யின் பொது நலனுக்காக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். அதனால்,அதை விமர்சிக்க விரும்பவில்லை என்று முன்னாள் மாநகர் அவைத் தலைவர் இசக்கிமுத்துகூறினார்.

அழகிரி இல்லாவிட்டால்...

ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. 1969-ல் அண்ணா இறந்தபோது, கலைஞர் கையில் தி.மு.க. வர வில்லை என்றால், எப்படி கட்சி அன்றே அழிந்திருக்குமோ அதேபோல, 1993-ல் வைகோ ம.தி.மு.க.வை ஆரம்பித்தபோது, அழகிரி மட்டும் இல்லாவிட்டால், தென்மாவட் டங்களில் திமுக அழிந்திருக்கும். எனவே, அழகிரியையும் ஸ்டாலி னையும் தலைவர் சமரசம் செய்து வைக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

அழகிரி செய்த தவறு

"மு.க.அழகிரி நல்லவராக இருந்தாலும் அறிவாளிகளையும், கொள்கைவாதிகளையும் அவர் நம்பவில்லை. கட்சியின் வரலாறு தெரியாத அடவாடிப் பேர்வழிகள் சிலரை பக்கத்தில் வைத்துக் கொண்டதுதான் அவர் செய்த இமாலய தவறு என்கின்றனர் சிலர்.

தா.கிருட்டிணன் கொலை வழக்கு

மாநகராட்சி தேர்தலில் உதயசூரியனை தோற்கடித்த ஒருவரின் உறவுக்கு மேயர் பதவி வாங்கிக் கொடுத்தார். தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சிக்கி கட்சிக்கும் தலைமைக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார்.

நில அபகரிப்பு வழக்கு

சினிமா ஆர்வத்தில் இருந்த தன் மகனை தேவையில்லாமல், கிரானைட் தொழிலில் இறக்கி கட்சியின் பெயரையும் சேர்த்துக் கெடுத்தார். அடாவடிப் பேர்வழிகளின் பேச்சைக் கேட்டு,வில்லங்கச் சொத்துகளை வாங்கி, மனைவியின் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவாக காரணமானார்.

கட்சிக்கு பாடுபடவில்லை

தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தும், கட்சி நிகழ்ச்சிகளிலோ, போராட்டங்களிலோ,பொதுக் கூட்டங்களிலோ ஒருமுறைகூட கலந்து கொண்டதில்லை. ஆக, அவர் செய்கிற ஒவ்வொரு தவறும் கட்சியையும் சேர்த்துப் பாதிப்பதால் தலைமையின் இந்த நடவடிக்கை சரியானதே" என்றார்.

ஆதரவும் எதிர்ப்பும்

மொத்தத்தின் திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டதற்கு மதுரை மற்றும் தென்மண்டலப்பகுதிகளில் ஆதரவும் எதிர்ப்புமான கருத்துக்களையே பதிவு செய்துள்ளனர் திமுகவினர்.

English summary
In Madurai, Azhagiri's supporters were dismayed. A section in the party feels they are unlikely to precipitate the situation further. Persisting with the view that a possible DMK-DMDK tie-up would not work, Alagiri said, "If the DMK and DMDK tie up, it will not help either party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X