For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாவல்பழம் தேடி வரும் கரடிகள்... கோத்தகிரி மக்கள் பீதி - வீடியோ

கோத்தகிரியை சுற்றியுள்ள ஊர்களில் நாவல் பழங்களை சாப்பிட கரடிகள் அதிகம் நடமாடுவதால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சுற்றியுள்ள பகுதிகளில் நாவல் பழம் அதிகமாக விளைந்துள்ளதால், அதை உண்ண வரும் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, மஞ்சூர், கொளக்கொம்பை ஆகிய ஊர்களில் தேயிலை தோட்டங்களில் உள்ள நாவல் மரங்களில் அதிகளவு பழங்கள் விளைந்துள்ளது. கரடிகள் நாவல் பழங்களை விரும்பியுண்ணும் என்பதால் அவை அப்பகுதிகளில் நடமாடிக்கொண்டிருக்கின்றன.

மேலும், இப்பகுதிகளில் கரடிகள் உலவுவதால் பொதுமக்கள் மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் நாவல் பழ மரங்கள் இருக்கும் பகுதிகளுக்கு வர வேண்டாம் என தெருக்கள் தோறும் நோட்டீஸ் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

கரடிக்குப் பயந்து பொதுமக்கள் வெளியே செல்ல பயப்படுகின்றனர். ஆகையால், வனத்துறையினர் கூண்டு வைத்து கரடிகளைப் பிடித்து காடுகளில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
In the surrounding villages of kotagiri, bears are coming to eat Jamun fruits and people afraid to roam outside.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X