யாரையும் கட்டிப் பிடிக்கக் கூடாது.... சினேகனுக்கு இந்த டாஸ்க்கை முதல்ல கொடுங்க பிக்பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடித்து கடுப்பேற்றுவதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர். இதனால் அவருக்கு மட்டும் கட்டிப்பிடிக்கவே கூடாது என்ற டாஸ்க்கை பிக்பாஸ் கொடுக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

இந்தியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஜூன் மாதம் முதல் தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். இதில் தொடக்கத்தில் 15 போட்டியாளர்கள் இருந்தனர்.

ஒருவர் பின் ஒருவராக வாரம் ஒருவர் என எலிமினேட் ஆகி வெளியேற்றப்பட்டனர். இந்நிகழ்ச்சியை பொறுத்த வரைக்கும் மக்களின் அர்ச்சனைகளை அன்றாடம் வாங்குபவர்கள் சக்தி, ஜூலி, காயத்ரி ஆகியோராவர்.

 சமூக வலைதளங்களில் கருத்து

சமூக வலைதளங்களில் கருத்து

ஓவியாவுக்கு எதிராகவும், பொய், போட்டி, பித்தலாட்டம் செய்வதாலும் சமூக வலைதளங்களில் மேற்கண்டவர்கள் நார் நாராக கிழிக்கப்பட்டு வருகின்றனர். இதுஒரு புறம் இருக்க ஆ ஊன்னா கட்டிப்பிடி வைத்தியம் செய்யும் சினேகனும் விமர்சனங்களுக்குள்ளாகிறார்.

பெண் போட்டியாளர்

பெண் போட்டியாளர்

நமீதா, ஜூலி, ஓவியா ஆகியோர் மன வருத்தப்பட்டாலும், அல்லது அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலோ படக்கென்று கட்டிப்பிடித்து விடுகிறார். இதுபோல்தான் நேற்று ஓவியா உடல் நலக் குறைவால் வீட்டை விட்டு வெளியேறியதற்கு ரைசா அழுதார்.

கட்டிப்பிடித்து ஆறுதல்

கட்டிப்பிடித்து ஆறுதல்

ரைசாவை கட்டிப்பிடித்த சினேகன் அவரது கண்களை துடைத்துவிட்டு ஆறுதல் கூறினார். ஓவியா வெளியேறியதில் ரசிகர்கள் ஆத்திரத்தில் இருந்த நிலையில், ரைசாவை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய சினேகன் மீது கடும் கடுப்பில் உள்ளனர் பார்வையாளர்கள்.

Bigg Boss Tamil, Film making has been made difficult says Kamal Hassan-
கட்டிப்பிடிக்கக் கூடாது

கட்டிப்பிடிக்கக் கூடாது

இதனால் சினேகனுக்கு பெண்களை மட்டுமல்ல, ஆண்களைக் கூட கட்டிப்பிடிக்கவே கூடாது என்ற டாஸ்க்கை பிக்பாஸ் வழங்க வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்புகின்றனர். மேலும் உடன் பிறந்த அண்ணன், தங்கையாக இருந்தாலும் அவர்களை தொட்டாலே பல் இல்லாத பாட்டிகள் நம்மை திட்டுவர். ஆனால் கலாசாரத்தை சீரழிக்கும் விதமாக குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் நிகழ்ச்சியில் இதுபோல் கட்டிப்பிடிப்பது ரசிக்கும் படியாக இல்லை என்பதும் அவர்கள் கருத்து.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Snehan often hugs lady contestants in Bigg boss house disappoints viewers.
Please Wait while comments are loading...