சென்னையில் தொடரும் பைக் ரேஸ் விபத்துகள்... சாலையில் நடந்து சென்றவர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் குடிபோதையில் நடத்திய பைக் ரேஸில் சிக்கி சாலையில் நடந்து சென்றவர் பலியானார்.

சென்னை ஒண்டிக்குப்பத்தில் மாணவர்கள் பைக் ரேஸ் நடத்தினர். அப்போது அவர்கள் அதிவேகமாக வாகனத்தை ஓட்டினர்.

Bike Race in Chennai: one died

அப்போது சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது பைக் மோதியது. இதில் நிலை குலைந்து விழுந்த அவர் பலியாகினார். ரேஸ் நடத்திய மாணவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய மாணவர்கள் விஜய் மற்றும் சீனிவாசன் ஆகியோர் படு காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் வார இறுதி நாள்களில் நடத்தப்படும் இதுபோன்ற பைக் ரேஸ்களால் அப்பாவிகள் பலியாவது தொடருகிறது. இவற்றை போலீஸார் கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
College students did a bike race in Chennai Ondikuppam road in a high speed. As they cannot control the vehicle they hit a man and he was died at the spot.
Please Wait while comments are loading...