6-வது முறை முதல்வராகும் கருணாநிதியை வீழ்த்துவாரா திருவாரூர் அதிமுக வேட்பாளர்
ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம்
திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக ஏ.என்.ஆர்.
பன்னீர்செல்வம் (வயது 56) அறிவிக்கப்பட்டுள்ளார். 1980 ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினர். கிளை செயலர், மாவட்ட விவசாய அணி பொருளாளர் ஆகிய பொறுப்புகளை ஏற்கெனவே வகித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக கட்சியின் மாவட்ட பொருளாளர், திருவாரூர் லட்சுமி நாராயணா கூட்டுறவு வங்கித் தலைவர்.
மன்னார்குடி
மன்னார்குடி தொகுதிக்கு வேட்பாளராக எஸ்.
காமராஜ்(வயது49) அறிவிக்கப்பட்டுள்ளார். 1981-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார். நீடாமங்கலம் ஒன்றிய செயலாளராகவும், திருவாரூர் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தவர். தற்போது ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார்.
ஆர். காமராஜ்
நன்னிலம் தொகுதி அதிமுக ஆர்.
காமராஜ்(வயது 55) அறிவிக்கப்பட்டுள்ளார். 1980 முதல் அதிமுக அடிப்படை உறுப்பினர். கோட்டூர் ஒன்றியச் செயலர், ஜெ. பேரவை மாநிலச் செயலர், 7 ஆவது முறையாக திருவாரூர் மாவட்டச் செயலர், 2001-07 வரை ராஜ்யசபா எம்.பி. என பதவி வகித்தவர்.
2006-ம் ஆண்டு மன்னார்குடி சட்டசபை தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். ஆனால் 2011-ல் நன்னிலம் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2011 நவம்பர் மாதம் முதல் உணவுத்துறை அமைச்சர், 2015 முதல் இந்து, சமய அறநிலையத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்தார்..
கே. உமாமகேஸ்வரி
திருத்துறைப்பூண்டி அதிமுக வேட்பாளராக
உமாமகேஸ்வரி (வயது42) அறிவிக்கப்பட்டுள்ளார். 1991-ம் ஆண்டுதான் அதிமுகவில் சேர்ந்தவர்.


Click it and Unblock the Notifications
