For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

19 வயதில் இளைய மடாதிபதி, சங்கரராமன் கொலையில் கைது... ஜெயந்திரர் வாழ்க்கை வரலாறு பிளாஷ்பேக்!

காஞ்சி சங்கரமடத்தின் இளைய பீடாதிபதியாக 19 வயதில் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயேந்திரர் 82 வயதில் காலமானார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    19 வயதில் இளைய மடாதிபதி 89 வயதில் மரணம்- வீடியோ

    காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலமானார். 19 வயதில் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டவர், சங்கரராமன் கொலையில் கைது என புகழுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர் ஜெயேந்திரர்.

    1935ம் ஆண்டு திருவாரூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் பிறந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி. 1954ம் ஆண்டு தன்னுடைய 19-வது வயதில் காஞ்சிபுரம் சங்கரமடத்து இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார். 40 ஆண்டுகள் இளையமடாதிபதியாக இருந்த அவர் 1994ம் ஆண்டில் 69வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.

     Biography of Kanchipuram Jayendrar Saraswathy

    இளையமடாதிபதியாக இருந்த கால கட்டத்தில் திடீரென காஞ்சி மடத்தை விட்டு வெளியேறி தலைமறைவானார். அப்போது மூத்த அரசியல் தலைவர்கள் தலையிட்டு ஜெயேந்திரரை கண்டுபிடித்து மீட்டு வந்தனர்.

    நவம்பர் 11, 2004, அன்று காஞ்சி கோவில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜனவரி 10, 2005 அன்று உச்சநீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    மேலும் உச்சநீதிமன்றம் இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக உயர்நீதிமன்றத்திலிருந்து புதுவை நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டு அதன்படி இவ்வழக்கு புதுவையில் விசாரிக்கப்பட்டு வந்தது. நவம்பர் 27 2013, அன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து ஜெயந்திர சரஸ்வதி விடுதலை செய்யப்பட்டார்.

    ஜெயேந்திரர் தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை மார்ச் 2011ல் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kancheepuram Sankara mut Jayendrar saraswathy passed away today morning here is the biodata of Jayendrar saraswathy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X