For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணியில் தேமுதிக 14, பாஜக, பாமக தலா 8, மதிமுகவுக்கு 7 தொகுதிகள்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக கூட்டணியில் கட்சிளுக்கான தொகுதிப் பங்கீடு ஒரு வழியாக முடிந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அதன்படி தேமுதிகவுக்கு ஏற்கனவே பேசப்பட்டு வருவது போல 14 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளதாம். மேலும் பாஜகவும் பாமகவும் தலா 8 தொகுதிகளிலும், மதிமுக 7 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.

இதுபோக இந்திய ஜனநாயக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் தரப்படுகிறதாம்.

அக்கப்போர் கூட்டணி

அக்கப்போர் கூட்டணி

தமிழகத்தில் இப்படி ஒரு அக்கப்போர் கூட்டணி இதுவரை அமையவில்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரும் குழப்ப கூட்டணியை பாஜக அமைத்துள்ளது.

முதல் கூட்டணியே இப்படியா

முதல் கூட்டணியே இப்படியா

பாஜக தலைமையிலான இந்த முதல் கூட்டணியில் முதலிலிருந்தே முற்றும் கோணல்தான்.

ஆளாளுக்கு அவரவர் இஷ்டத்திற்கு

ஆளாளுக்கு அவரவர் இஷ்டத்திற்கு

இக்கூட்டணியில் ஆளாளுக்கு அவரவர் இஷ்டத்திற்கு சீட் கேட்டதால் பாஜக தலைவர்கள் மண்டை காய்ந்து போய் விட்டனர். பைத்தியம் பிடிக்காத குறைதான்.

பெரும் கஷ்டப்படுத்திய தேமுதிக - பாமக

பெரும் கஷ்டப்படுத்திய தேமுதிக - பாமக

இவர்களில் தேமுதிகவும், பாமகவும்தான் பாஜகவை ரொம்பக் கஷ்டப்படுத்தியவர்கள். எங்களுக்கு இத்தனை சீட் வேண்டும் என்று இவர்கள் கறாராக பேசியதால் பாஜக ஸ்தம்பித்தது.

எரிச்சலடைந்த மதிமுக

எரிச்சலடைந்த மதிமுக

ஆனால் முதல் ஆளாக கூட்டணிக்கு வந்த மதிமுகவை பாஜக பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக தேமுதிகவைத்தான் அது ரொம்ப முக்கியமாக கருதியதால் கடுப்பாகிப் போனது மதிமுக. ஒரு கட்டத்தில் அதுவும் பாஜகவுக்கு நெருக்குதல் கொடுத்தது - வேறு வழியில்லாமல்.

குழம்பி, புலம்பித் தவித்த பாஜக

குழம்பி, புலம்பித் தவித்த பாஜக

இதனால் பெரும் குழப்பத்துக்கு ஆளான பாஜக, தேமுதிகவின் முரண்டால் புலம்பித் தள்ளும் நிலைக்குப் போனது. இருந்தாலும் வேறு வழியில்லாமல் தேமுதிகவை தொடர்ந்து தாஜா செய்து பேசி வந்தது.

திடீரென பிரசாரத்திற்குப் புறப்பட்ட தேமுதிக

திடீரென பிரசாரத்திற்குப் புறப்பட்ட தேமுதிக

இந்த நிலையில்தான் மார்ச் 14ம் தேதி விஜயகாந்த் பிரசாரத்தில் குதித்து விட்டார். அத்தோடு தனது கட்சியின் 5 வேட்பாளர்களின் பெயர்களையும் அவர் தடாலடியாக அறிவித்தார். இதனால் பாஜக அதிருப்தி அடைந்தது.

இதோ வந்தது தீர்வு...

இதோ வந்தது தீர்வு...

இந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தேமுதிகவுக்காம்

இது தேமுதிகவுக்காம்

தேமுதிகவுக்கு ஏற்கனவே கூறியபடி 14 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது. அதன்படி, மத்திய சென்னை, திருவள்ளூர், வட சென்னை, சேலம், திருச்சி, நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாமக்கல், மதுரை, பொள்ளாச்சி.

பாமகவுக்கு இது

பாமகவுக்கு இது

அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஆரணி, தர்மபுரி, சிதம்பரம் தனி, மயிலாடுதுறை, ஸ்ரீபெரும்புதூர், கரூர்.

ம.தி.மு.க. இவை

ம.தி.மு.க. இவை

காஞ்சீபுரம், விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, தேனி, சிவகங்கை, நாகப்பட்டினம்.

பா.ஜ.க.வுக்கு இதுதான்

பா.ஜ.க.வுக்கு இதுதான்

தென் சென்னை, தஞ்சாவூர், வேலூர், கோவை, ராமநாதபுரம், நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி.

இது மற்றவர்களுக்கு

இது மற்றவர்களுக்கு

இந்திய ஜனநாயக் கட்சிக்கு பெரம்பலூர், கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சிக்கு திருப்பூர்,. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி.

English summary
Sources say that the BJP has finalised its seat sharing with alliance parties in TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X