For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்கு பாஜக எடுக்கப்போகும் அஸ்திரம்.. தமிழகமும் லிஸ்டில் இருக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    சிறுபான்மையினர் வாக்குகளை பெற பாஜக போடும் திட்டம்

    சென்னை: அமித்ஷா தலைவராக பதவிக்கு வந்ததில் இருந்து பூத் மேலாண்மை என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கான ரகசியமாக இருந்து வருகிறது.

    பல மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெறுவதற்கு பூத் மேலாண்மைதான் முக்கிய பங்கு வகித்தது. இன்னும் கூட சில பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலை உள்ளது.

    அதிலும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு போதிய பூத் மேலாண்மை நிர்வாகிகள் இல்லை.

    பாஜக நிர்வாகி

    பாஜக நிர்வாகி

    இப்போது முத்தலாக் மற்றும் நிக்கா ஹலாலா ஆகியவை இந்த விஷயத்தில் பாஜகவுக்கு கை கொடுக்க உள்ளன. அக்கட்சியில் உள்ள ஒரு மூத்த நிர்வாகி 'ஒன்இந்தியாவிடம்' தெரிவிக்கும்போது, கடந்த லோக்சபா தேர்தலின்போது, எங்கெல்லாம் பாஜகவிற்கு பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தார்களோ அந்த பூத்துகளில் எல்லாம் 12 முதல் 14 உறுப்பினர்களை நியமிக்க திட்டம் வைத்துள்ளோம். அதிலும் குறிப்பாக சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் எங்களுக்கு இலக்கு என்று தெரிவித்தார்.

    தமிழகமும் உண்டு

    தமிழகமும் உண்டு

    தமிழகம், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், தெலுங்கானா, ராஜஸ்தான், குஜராத், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய முக்கிய மாநிலங்களில் பூத் மட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி இன்னும் வலிமை பெற வேண்டிய அவசியம் உள்ளது என்பதை உணர்ந்து உள்ளது.

    கடந்த தேர்தல்

    கடந்த தேர்தல்

    2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் கூடிய பகுதிகளில் பாஜக சராசரியாக சுமார் 20% வாக்குகளை பெற்றிருந்தது. இந்த வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பது பாஜக தலைமையின் திட்டம்.

    சிறுபான்மையினர் இலக்கு

    சிறுபான்மையினர் இலக்கு

    நாட்டில் சுமார் 90 மாவட்டங்களில் சிறுபான்மையினர் அதிக அளவில் வசிக்கிறார்கள். 338 டவுன் பகுதிகளில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை என்பது 25 சதவீதம் அளவுக்கு உள்ளது. 1228 பிளாக்குகளில் மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதத்துக்கும் மேல் சிறுபான்மையினராக உள்ளனர் என்ற புள்ளி விவரங்கள் பாஜக வசம் உள்ளது.

    English summary
    Booth management has been the core to the success of the Bharatiya Janata Party (BJP) ever since Amit Shah has taken over as the party president. So the party has been focusing on booth management and getting results but still a big number of booths remained unrepresented in many areas of the country in the minority dominated areas. This is an attempt by the BJP to reap benefits of its initiatives on tripple talaq and nikah-halala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X