ரேஷன் சரக்கு காலியாச்சி!! டாஸ்மாக் சரக்கு அமோகமாச்சி!! பருப்புடன் தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளில் முறையாக உணவுப் பொருட்கள் வழங்கக்கோரி பா.ஜ.க மகளிரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை: ரேஷன் கடைகளில் பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சரிவர வழங்கப்படாததைக் கண்டித்து சென்னையில் பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கைகளில் பருப்புடன் தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.
ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. அரசு நிதி ஒதுக்காததே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

ஆனால் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இதனை முற்றிலுமாக மறுத்தார். ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்படுகிறது என அவர் கூறினார்.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

கையில் பருப்பு பொட்டலங்களை ஏந்தியவாறு அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் ரேஷன் சரக்கு காலியாச்சி!! டாஸ்மாக் சரக்கு அமோகமாச்சி! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications