For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக... இந்த வாக்கு வங்கிக்குத்தான் இவ்வளவு அக்கப்போரா??

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவினர் பேசும் பேச்சையெல்லாம் உட்கார்ந்து ஒரு வரி கூட விடாமல் கோர்வையாகக் கோட்டால் உங்களுக்கு ஆச்சரியம் ஆச்சரியமாக வரும். ஆனால் அவர்களது வாக்கு வங்கியைப் பார்த்தால்.. அடப் பாவிகளா இம்புட்டுக்கூண்டு வாக்கு வைத்துக் கொண்டா இம்புட்டு பேச்சு பேசுறீங்க என்று உங்களுக்குக் கோவம் வரும். இவர்களுடன் ஒப்பிட்டால் காங்கிரஸ் கட்சி எவ்வளவோ தேவலை.

ஆனால் காங்கிரஸை விட பாஜகவினர் போட்டு வரும் கூப்பாடுதான் தாங்க முடியவில்லை. தோ மே 16ம் தேதி தேர்தல் முடிந்ததுமே இவர்கள்தான் ஆட்சியைப் பிடிக்கப் போவதாக கூறி அவர்களாகவே பில்டப் செய்து கொண்டு பேசும் பேச்சுக்கள்.. அடேங்கப்பா.

கடந்த கால சட்டசபைத் தேர்தல்களில் இரு பெரும் தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவீதத்தைப் பார்த்தால் பாஜகவின் பரிதாப நிலை புரிய வரும்.

ஒரு தடவை கூட 4 சதவீதத்தைத் தொட்டதே இல்லை

ஒரு தடவை கூட 4 சதவீதத்தைத் தொட்டதே இல்லை

கடந்த சட்டசபைத் தேர்தல்களில் பாஜகவின் வாக்கு சதவீதமானது ஒரு முறை கூட 4 சதவீதத்தைத் தொட்டதே இல்லை. அதற்குள்தான் தொடர்ந்து சுருண்டு கிடக்கிறது பாஜக.

1980

1980

1980ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வாக்கு வெறும் 0.07 மட்டுமே. காங்கிரஸுக்கோ 20.92 சதவீத வாக்குகள் கிடைத்தன.

1984

1984

1984 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 0.25 சதவீத வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸின் வாக்கு சதவீதம் சரிந்து 16.28 ஆக இருந்தது.

1989

1989

1989 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 0.35 சதவீத வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு 19.83 சதவீத வாக்குகள் கிடைத்தன.

1991

1991

1991ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 15.19 சதவீத வாக்குகளைப் பெற்றது. பாஜகவுக்கு 1.70 சதவீத வாக்குகள் கிடைத்தன.

1996

1996

1996ல் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அடி கிடைத்தது. அக்கட்சிக்கு 5.61 சதவீத வாக்குகளே கிடைத்தன. அந்தத் தேர்தல் முதல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில்தான் வாக்குகளைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவுக்கு 1.81 சதவீத வாக்குகள் கிடைத்தன.

2001

2001

2001 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு சற்று ஏற்றம் கிடைத்தது. இந்தத் தேர்தலில் மட்டும்தான் காங்கிரஸை விட பாஜக அதிக வாக்குகளைப் பெற்றது. அதாவது 3.19 சதவீத வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸுக்கு 2.48 சதவீத வாக்குகள் கிடைத்தன.

2006

2006

இத்தேர்தலில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் உயர்ந்தது. 8.38 சதவீத வாக்குகளைப் பெற்றது. பாஜகவின் பங்கு 2.02 ஆக குறைந்து போனது.

2011

2011

2011 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 2.22 சதவீத வாக்குகளே கிடைத்தன. காங்கிரஸுக்கோ 9.30 சதவீத வாக்குகள் கிடைத்தன.

லோக்சபா தேர்தலிலும்

லோக்சபா தேர்தலிலும்

ஒரு தேர்தலில் கூட பாஜகவால் தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரிய அளவில் பாதிப்பு வந்ததே இல்லை. இருப்பினும் மோடி அலையை வைத்து ஏதாவது செய்து விடலாமா என்று கடந்த லோக்சபா தேர்தலில் தலைகீழாக நின்று பார்த்தது. ஆனால் ஒரு கிச்சுகிச்சைக் கூட மூட்ட முடியாமல் போய் விட்டது பாஜகவால்.

English summary
BJP has a very pathetic vote bank in the Assembly polls in Tamil Nadu. When compared with BJP, the Congress's vote bank is much better.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X