நாங்க ரெடி.. நீங்க ரெடியா.. ஸ்டாலினுக்கு சவால் விட்ட தமிழிசை!
சென்னை: திமுக தமிழகத்துக்கு செய்த சாதனைகள் என்னென்ன, அவற்றை பட்டியலிட தயாரா என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன், அக்கட்சி தலைவருக்கு சவால் விடுத்துள்ளார்.
பாஜக-திமுக மோதல் முற்றிகொண்டு வருகிறது. இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலை ட்விட்டரில் தொடுத்து கொண்டு வருகிறார்கள். திமுக சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதல் பேசிய ஸ்டாலின், கடந்த 4 வருடங்களாக மத்திய அரசு தமிழகத்துக்கு எதையுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

தமிழிசை சவால்
திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
|
என்ன செய்தது திமுக?
‘‘4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக அரசு என்ன செய்தீர்கள் என கேட்கும் ஸ்டாலின் அவர்களே, நீங்கள் மத்தியில் ஆண்ட 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில திமுக தமிழகத்திற்கு செய்த துரோகப்பட்டியல் இதோ!
|
ஊழல் பங்காளிகள்
தீராத மின்வெட்டு ,காவிரி ,மீனவர் இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் ,காங்கிரசின் ஊழல் பங்காளிகள் எய்ம்ஸ்? ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட நாங்கள் தயார்.

நீங்கள் ரெடியா?
10 ஆண்டுகளில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த பெரிய திட்டங்கள் பற்றி நீங்கள் பட்டியலிட்டால் ஒன்றுமில்லை என்று அறிவீர்கள். எங்களிடம் கேளுங்கள் பதில் சொல்ல பட்டியலுடன் தயாராக இருக்கிறோம். நாங்கள் ரெடி. நீங்கள் ரெடியா''.
இவ்வாறு தமிழிசை பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.