ரஜினி- கமல் இணைந்து அரசியல்.... "நினைத்தாலே இனிக்கும்"?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக தெரிவித்துள்ள நிலையில், இருவரும் சேர்ந்து செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்களிடையே உள்ளது.

ரஜினியும், கமலும் திரைத்துறைக்கு வந்தது முதல் எவ்வளோ அதே அளவுக்கு ரசிகர்களையும் சம்பாதித்து வைத்துள்ளனர். ரஜினியை கடந்த 21 ஆண்டுகளாக ரசிகர்கள் அரசியலில் ஈடுபட அழைப்பு விடுத்து வருகின்றனர். தற்போது ரஜினி அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கட்சி பணிகள்

கட்சி பணிகள்

ரஜினி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னர் கட்சியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கமல் ஹாசனும் அரசியலுக்கு வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட்டியுள்ளார். இதனால் அவரது ரசிகர்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அரசை கமல் கடுமையாக விமர்சித்தார். இதனால் தமிழக அமைச்சர்களும் கமலை விடாமல் கண்டபடி பேசி கடித்து குதறினர். இறுதியாக அமைச்சர் ஜெயகுமார், கமல் அரசியலுக்கு வந்து பேசட்டும் அப்போதுதான் புரியும் என்றார்.

கமல் டுவீட்

கமல் டுவீட்

இந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக ஒரு பாட்டு வடிவில் டுவிட்டரில் கமல் பதிவிட்டுள்ளார். நள்ளிரவில் பதிவிட்டாலும் இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரு துருவங்களின் அரசியல் பிரவேசம் என்பது இரு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னென்ன வாய்ப்புகள்

என்னென்ன வாய்ப்புகள்

தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக ரஜினியும், கமலும் கருத்து வெளியிட்டனர். இருவரும் சேர்ந்து தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இருவரும் அரசியலுக்கு வந்து இணைந்து பணியாற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு இரு தரப்பு ரசிகர்களிடமும் நிறைந்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வரட்டும் என்று கமல், அவர் பின்னால் இருந்து ஆதரவு தரலாம் என்ற கோணத்திலும் ஆலோசிக்கப்படுகிறதாம்.

Kamal Hassan Ready to do Anything money Says CV Shanmugam-Oneindia Tamil
இருவரும் அரசியல் அமைப்பு

இருவரும் அரசியல் அமைப்பு

அப்படியில்லாவிட்டால் இருவருமே இணைந்து தேர்தல் அரசியல் இல்லாத சமூக அமைப்பை தொடங்கி அரசியலை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடலாம். இல்லாவிட்டால் கமல் ஒரு அரசியல் அமைப்பை தொடங்கி அதன் மூலம் ரஜினிக்கு ஆதரவு அளிக்கலாம். இருவருக்கு தேவையானது ஊழலற்ற அரசியல்தான். அதனால் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடமாட்டார்கள் என்பது தெள்ளத் தெளிவு. பெரும்பாலும் ரஜினியை முன்னிறுத்தி கமல் அவருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்றுதான் கூறப்படுகிறது. இரு துருவங்களும் இணைந்தாலும் சரி, ஒருவருக்கு இன்னொருவர் ஆதரவு தந்தாலும் சரி, இவர்களின் நியாயமான ஆதங்கத்தை புரிந்து கொள்ளும் மக்கள், ரசிகர்கள், சக நடிகர், நடிகைகள் (நியாயமான) என அனைவரின் ஆதரவும் இவர்களுக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லை. "அண்ணாமலை ஆண்டவருக்கு" ஜே!!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Both Rajinikanth and Kamal Hassan indirectly says they enter into politics. Fans expects that they both join together and indulge in politics.
Please Wait while comments are loading...