For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேய் என்றாலும் பயம், பி.இ என்றாலும் பயமா?.. பயத்தை விரட்ட ஒரு "கோர்ஸ்"

Google Oneindia Tamil News

சென்னை: இந்தவருடம் பொறியியல் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களின் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்தின் மேலுள்ள பயத்தினைப் போக்க அவர்களுக்கு 15 நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரி இணைப்பு பயிற்சி என்ற சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேலும், மாணவர்களின் அடிப்படை கணித அறிவை மேம்படுத்த முதல் ஆண்டு பாடத் திட்டத்தில் 11ம் வகுப்பு கணித பாடம் சேர்க்கப்பட உள்ளது.

பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகள் பலரும் முதல் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைவது தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

Bridge course for first year BE students

தோல்வி அடையும் மாணவர்கள்:

12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு பல தனியார் பள்ளிகளில் 11ம் வகுப்பை பாடத்தை நடத்தாமல் 11ம் வகுப்பிலேயே 12ம் வகுப்பு பாடங்களை நடத்துவதாலும், அதன் காரணமாக பாடங்களில் அடிப்படை அறிவு கிடைக்காமல் தோல்வி அடைகிறார்கள் என்றும், பாடங்களை புரியாமல் மனப்பாடம் செய்து படிப்பதாலும் இந்த நிலை ஏற்படுகிறது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கண்ட றிந்தது.

ரொம்ப முக்கியமான 11ம் வகுப்பு:

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புக்கு அடிப்படையான 11ம் வகுப்பு கணித பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் தர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பள்ளி-கல்லூரி இணைப்பு பயிற்சியிலும், முதல் ஆண்டு செமஸ்டர் பாடத்திட்டத்திலும் 11ம் வகுப்பு கணித பாடம் இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் எம்.ராஜாராம் தெரிவித்தார்.

இணைக்கும் பாலம்:

கடந்த ஆண்டு பிரிட்ஜ் கோர்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த ஆண்டு இந்த பயிற்சியில் பொறியியல் கல்லூரி தொடங்கி யதும் முதல் 15 நாட்களுக்கு மாணவர் களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் 12ம் வகுப்பில் மதிப்பெண் சார்ந்து படித்திருக்கக்கூடும்.

தயார்படுத்தும் பயிற்சி:

ஆனால், பொறியியல் படிப்பு என்பது பயன்பாடு சார்ந்தது. அதற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் அடிப்படை கணிதம், இயற் பியல், ஆங்கில பாடங்கள் நடத்தப்படும். ஆங்கில புத்தகங்களை படிக்கக் கொடுப்போம். ஆங்கில பயத்தை போக்கும் வகையில் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சியும் அளிக்கப்படும்.

4 கட்டங்களாக பயிற்சி:

பிரிட்ஜ் கோர்ஸ் குறித்து முதலில் பொறியியல் கல்லூரி ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியை ஏறத்தாழ 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அண்ணா பல் கலைக்கழகத்தில் 4 கட்டங்களாக அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Anna university will conduct a special program for new entry engineering students for gaining knowledge about maths and English.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X