ஜெயலலிதா இருந்திருந்தால் வந்திருப்பார்களா.. சி.ஆர்.சரஸ்வதி விளாசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெயலலிதா இருந்திருந்தால் ரெய்டு வந்திருப்பார்களா?-சி.ஆர்.சரஸ்வதி விளாசல்- வீடியோ

  சென்னை: ஜெயலலிதா இருந்திருந்தால் வருமான வரித் துறையினர் ஐடி ரெய்டு நடத்தியிருப்பார்களா என்று தினகரன் ஆதரவாளரான சி.ஆர். சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்டது என்றார்.

  ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் உள்பட சசிகலா, தினகரன் குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில் தினகரனும் இந்த ரெய்டுகளுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தினகரனின் தீவிர ஆதரவாளரான சி.ஆர். சரஸ்வதி செய்தியாளரிடம் பேட்டி அளித்தார்.

   அரசியல் காழ்ப்புணர்ச்சி

  அரசியல் காழ்ப்புணர்ச்சி

  அப்போது அவர் கூறுகையில் ஒரே நேரத்தில் சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் மட்டும் 200 இடங்களில் நடத்தப்படும் வருமான வரி சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும். ஜெயா டிவியும், நமது எம்ஜிஆரும் ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் இருந்தது. வரி ஏய்ப்பு செய்திருந்தால் ஒரு நிறுவனத்தை இத்தனை ஆண்டுகள் எப்படி நடத்தமுடியுமா. ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோல் ரெய்டுக்கு வந்திருப்பார்களா.

   தொண்டர்கள் ஆதரவு

  தொண்டர்கள் ஆதரவு

  மக்களின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் இருப்பதாலும், நமது எம்ஜிஆரையும், ஜெயா டிவியையும் மீட்பது என்று எடப்பாடி தரப்பினர் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதாலும் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

   தைரியம் உள்ளது

  தைரியம் உள்ளது

  மேலும் எடப்பாடி அணியினர் என்ன சொன்னாலும் மத்திய அரசு கேட்கிறது. அந்தளவுக்கு மத்திய அரசின் பாசத்துக்குரியவர்களாக எடப்பாடி அணியினர் உள்ளனர். ஜெயலலிதா எங்களுக்கு தைரியத்தையும், தெம்பையும் கொடுத்துள்ளதால் நாங்கள் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

   சட்டபடி தீர்ப்போம்

  சட்டபடி தீர்ப்போம்

  எங்கள் பக்கம் நியாயம் உள்ளது. உட்கார வைத்தவர்களின் தலையிலேயே கைவைக்கும் அரசு இது என்பது மக்களுக்கு தெரியும். இதை சட்டபடி தீர்ப்போம் என்றார் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran's supporter C.R.Saraswathi calls it raid in Sasikala's relatives house as political vendatta. She questions that if Jayalalitha is alive, can they conduct these raid?

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற