For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம்... எருமை மாட்டில் வந்து மனுத்தாக்கல் செய்த நெல்லை வேட்பாளர்

Google Oneindia Tamil News

நெல்லை: வேட்புமனுத் தாக்கல் செய்வதாக எருமை மாட்டில் ஏறி வந்த வேட்பாளரால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார் சுப்பிரமணியன்.

தொண்டர்கள் 8 பேர் உடன் வர, எருமை மாட்டில் சவாரி செய்து வந்த சுப்பிரமணியனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன், ‘பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பொருளாதாரம் பல மடங்கு வீழ்ச்சி கண்டுள்ளது. எனக்கு காரிலோ வண்டியிலோ வந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் அளவு பொருளாதார வசதியில்லை. என் நண்பருடைய எருமை மாட்டை யாசகம் கேட்டுப் பெற்று வந்தேன்' எனத் தெரிவித்தா.

English summary
In Tirunelveli the Hindu Makkal katchi candidate files nomination by coming in buffalo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X