4 செ.மீ மழையைதான் சென்னை தாங்கும்.. அதற்குமேல் பெய்தால் ஒன்னும் பண்ண முடியாது.. கைவிரித்த முதல்வர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முதல்வர் வைக்கும் செக் என்ன தெரியுமா?- வீடியோ

  சென்னை: 4 செ.மீ மழை அளவை மட்டுமே வெளியேற்ற சென்னையில் வடிகால் வசதி உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

  மழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசுத் துறை செயலாளர் கலந்து கொண்டனர்.

  மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகி 3 மாவட்ட கலெக்டர்களும் கலந்து கொண்டனர்.

  ஆலோசனை

  ஆலோசனை

  பேரிடர் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை எப்படி அகற்றுவது என்பது தொடர்பாக முதல்வருக்கு அப்போது ஆலோசனை வழங்கப்பட்டது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மழை பாதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன்பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

  துரித நடவடிக்கை

  துரித நடவடிக்கை

  எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், மழை பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில், 3 மாதங்களில் பெய்யும் மழை 5 நாளில் பெய்துள்ளது. அதிக அளவு மழை பெய்தாலும் அரசின் துரித நடவடிக்கையால் உடனடியாக மழை நீர் அகற்றப்பட்டது. இதை ஊடகங்களே பாராட்டியுள்ளன.

  மோடி கேட்டறிந்தார்

  மோடி கேட்டறிந்தார்

  சிறப்பான குடிமராமத்து பணி காரணமாக கூடுதலாக நீர் சேமித்துள்ளோம். தாழ்வான இடங்களில் மழையால் தேங்கிய நீர் அமைச்சர்கள் மேற்பார்வையில், உடனடியாக வெளியேற்றப்பட்டது. தினத்தந்தி பவள விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, நேரம் ஒதுக்கி தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார். பருவ மழை முடிந்த பிறகுதான் முழுமையான பாதிப்புகள் குறித்து தெரியவரும். விரைவில் மழை நிவாரணத்திற்கு மத்திய அரசின் உதவி தமிழகத்திற்கு கிடைக்கும்.

  நம்மால முடியாதுப்பா

  நம்மால முடியாதுப்பா

  தமிழகம் மட்டுமில்லை, இந்தியா மட்டுமில்லை, உலக அளவில் நகரப்பகுதிகளில் 4 செ.மீ பெய்யும் மழை நீரை வெளியேற்றவே வசதி உள்ளது. அதற்கு மேல் மழை பெய்தால், சாலைகள் வழியாகவே மழை நீர் வடிய வேண்டும். சென்னையிலும் அப்படித்தான் நடந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் 30 வருடங்களுக்கு மேலாக கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அவற்றை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Cant exhaust water from Chennai if more than 4 cm rain lashes, says CM Edappadi Palanisamy.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற