மயிலையில் பக்தர்கள் வெள்ளம்.. கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம்..!
சென்னை: சென்னை மயிலாப்பூரில் நடந்த கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு வணங்கினர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா மார்ச் 14ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நாளை முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழாவும் நடைபெற உள்ளது.
அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டதும், முருகவேள், நான்முகன், வேதம், சுக்கிரன், ராமர் வழிபட்டு பேறு பெற்ற கோவில் மயிலாப்பூர் கற்பகம்மாள் உடனாகிய கபாலீசுவரர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.

மார்ச் 14 முதல்
நடப்பாண்டு 10 நாள் பங்குனி பெருவிழா, மார்ச் 14ம் தேதி கிராம தேவதை பூஜையுடன் ஆரம்பமானது. இன்று தேரோட்டம் நடைபெற்றது.

கோலாலகமான தேரோட்டம்
இன்று காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளலும், தேரோட்டம் நடைபெற்றது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு வணங்கி அருள் பெற்றனர்.

நாளை அறுபத்து மூவர் திருவிழா
21ம் தேதி நாளை பகல் 3 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவனும், 63 நாயன்மார்கள் திருக்காட்சியும் நடக்கிறது.

23ம் தேதி திருக்கல்யாணம்
22ம் தேதி மாலை 6.30 மணிக்கு இறைவன் பிச்சாடனார் கோல விழா மற்றும் ஐந்திருமேனிகள் விழாவும் நடக்கிறது. தொடர்ந்து 23ம்தேதி இரவு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு 8.45 மணிக்கு கொடியிறக்கம், சண்டேசுவரர் விழாவும் நடைபெறும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications