ஊட்டி ரத்த தான முகாமில்.. சாதி விவரங்கள் சேகரிப்பு! அதிர்ச்சியில் மாணவர்கள்!

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நேற்றைய தினம் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் நடந்த ரத்ததான முகாமின்போது மாணவர்களிடம் சாதி விவரங்களை சேகரித்ததாக புகார்கள் எழுந்திருக்கிறது. ரத்த தானம் செய்வதே சாதியை மீறிய வரவேற்கத்தக்க நடவடிக்கைதான். அதிலும் வந்து சாதி விவரங்களை கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு காலத்தில் ரத்த தானம் குறித்து பொதுமக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. ஆனால், இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஏராளமான இளைஞர்களும் இளம்பெண்களும் சாதி, மதம், பாலினம் கடந்து ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கின்றனர்.

Ooty Blood Donation

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் இப்படித்தான் நேற்று ரத்த தான முகாம் நடந்தது. முகாமின் தொடக்கத்தில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வழங்கிய அதிகாரப்பூர் பதிவேட்டில் மட்டுமே மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்தனர். வழக்கமாக ரத்ததானம் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர்கள் இப்படி படிவத்தை கொடுத்து தகவல்களை பதிவு செய்ய கேட்பார்கள். காரணம் அடுத்த முறை ஏதாவது எமெர்ஜென்சி எனில் இந்த விவரங்களை பார்த்து போன் செய்து அழைக்கதான்.

ஆனால், முகாம் தொடங்கிய பிறகு மத்திய அரசின் இளைஞர் நலன் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'மேரா யுவா பாரத்' அமைப்பின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளரான எஸ். ரஞ்சித்குமார் மாணவர்களுக்கு தனியாக ஒரு படிவத்தை கொடுத்து நிரப்ப கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த படிவத்தில் ரத்த தானம் செய்யும் மாணவர்கள் தங்களது சாதி பின்னணியை குறிப்பிட தனிப்பிரிவு ஒன்று இருந்தது. அதில் ரத்த தானம் செய்பவர்கள் SC/ST/OBC அல்லது பொதுப்பிரிவு ஆகியவற்றுள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன. ரத்த தானம் செய்ய வந்த மாணவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் சாதி விவரம் கேட்கப்பட்ட அந்த படிவத்தை அவர்கள் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகவும் பதிவு செய்து சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் ஜே.எபநேசர் நீலகிரி மாவட்ட போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரத்ததான முகாமில் சாதி விவரங்களை சேகரித்தது கல்லூரியை தவறாக வழிநடததும் செயல் என்றும், எனவே இந்த செயலில் ஈடுபட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரஞ்சித்குமார் மீது மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேரா யுவா பாரத் அமைப்பின் பின்னணி

கடந்த 2023ம் ஆண்டு அக்.31ம் தேதி இந்த அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டிருந்தது. இளைஞர்களிடம் தலைமைப் பண்புகளை வளர்ப்பதற்கான பயிற்சிகளை வழங்கவும், ரத்ததான முகாம்கள், தூய்மை பணிகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற சமூக நலப்பணிகளில் இளைஞர்களை தன்னார்வலராக ஈடுபடுத்தவும் இந்த அமைப்பு செயல்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், சாதிய விவரங்களை கேட்பதன் மூலம் இளைஞர்களை எந்த பாதையில் இந்த அமைப்பு வழிநடத்த இருக்கிறது? என்கிற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+