காவிரிக்காக நடந்த ரயில் மறியல் போராட்டத்தை விமர்சித்த தமிழிசை.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நேற்றும், அதற்கு முன்தினமும், தமிழகமெங்கும் ரயில் மறியல் போராட்டங்கள் செய்தனர். திமுக, ம.ந.கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதில் பங்கேற்றன.

இந்நிலையில், பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"ரயில் பயணம் செய்வது சாதாரண மக்கள்... இரண்டு நாள் தொடர்ந்து ரயில் மறியல் நியாயமா? ஆயிரக்கணக்கான பயணிகளை அவதிப்படவைப்பது சரியா?" இப்படி ஒரு கேள்வியை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் டிவிட்டரில் கேட்டாலும், கேட்டார், அதே பாணியில் பதிலுக்கு நெட்டிசன்கள் கேள்விக்கணைகளை தொடுத்து, தமிழிசையை கலங்க வைத்துவிட்டனர்.

தமிழிசை டிவிட்டுக்கு பின்னூட்டமாக குவிந்துள்ள நெட்டிசன்கள் கேள்விகள் சிலவற்றை இதில் பாருங்கள்:

ரயில் கட்டணம்

சாதாரண மக்கள் என தெரிந்தும் இரயில் கட்டணத்தை உயர்த்தியும் ப்ரீமியமும் ஞாயமா? ஆயிரக்கணக்கான பயணிகளை அவதிப்படவைப்பது சரியா?

விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா

காவிரி விவகாரத்தில் கர்நாடக ஆதரவாக இருந்து தமிழக விவசாயிகளை வயிற்றில் அடிக்கலாமா?

விலையேற்றம்

பெட்ரோல் விலைய ஏத்தி, பைக்'ல போறவனை நடந்தோ, சைக்கிள்லயோ போக வச்ச உங்க அரசு பண்றது மட்டும் சரியா.??

கலவரம் செய்தீர்களே

இதை நீங்க போராட்டம்/ஆர்பாட்டம்/கலவரம் பண்ணும் போதும் சொல்லலாம்.இது உண்மையான மக்கள் மீதான அக்கறையாகத் தெரியவில்லை

மூன்று முறை கட்டண உயர்வு

மூன்று முறை ரயில் கட்டணத்தை ஏற்றி, ரயிலில் பயணம் செய்யும் சாதாரண மக்களின் அடிவயிற்றில் அடிப்பது நியாயமா..???

இப்படியாக கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்துவிட்டனர் நெட்டிசன்கள். தமிழிசை பதிலுக்கு எதுவுமே சொல்ல முடியவில்லை. மாநிலத்திற்கு தக்கபடி ஜால்ரா போடும் கர்நாடக பாஜகவினரை பார்த்து இன்னமும் பாடம் படிக்கவில்லை போலும் தமிழிசை. இப்படி மாநில உணர்வு பிரச்சினையில், நேர் எதிர் கருத்து சொன்னால், தமிழகத்தில் இவங்க கட்சியை எப்படி வளர்ப்பார்கள்?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu BJP chief Tamilisai Soundrajan comes under hammer for criticizing Rail roko protest.
Please Wait while comments are loading...