திருச்சி முதல் ஆளுநர் மாளிகை நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம் - ஏப்.7ல் ஸ்டாலின் தொடக்கம்
காவிரி உரிமை மீட்பு பயணத்தை வரும் 7ஆம் தேதி திருச்சி முக்கொம்புவில் மு.க ஸ்டாலின் துவங்குகிறார்.
Recommended Video

சென்னை: திமுக சார்பில் திருச்சியில் இருந்து சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி ஸ்டாலின் திருச்சியில் பயணத்தை தொடங்குகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், திருச்சி முக்கொம்பிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிந்த பின்பும் வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

காவிரிக்காக போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

காவிரிக்காக பந்த்
இதில் ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு, வேலை நிறுத்தம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காவிரி உரிமை மீட்பு பயணமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஸ்டாலின் பயணம்
இந்த நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி ஸ்டாலின் திருச்சியில் பயணத்தை தொடங்குகிறார். திருச்சி முக்கொம்பிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

7 நாட்கள் பயணம்
7 நாட்கள் மேற்கொள்ளும் வகையில் பயணத்திட்டம் வகுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. காவிரி உரிமை மீட்பு பயணத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கின்றன. நமக்கு நாமே பயணம் செய்த ஸ்டாலின் இப்போது காவிரி உரிமை மீட்பு பயணம் செய்ய உள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications