For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தற்கொலை அல்ல... மத்திய- மாநில அரசுகளால் செய்யப்பட்ட படுகொலை- இயக்குநர் கௌதமன்

அனிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை. மத்திய, மாநில அரசுகளால் செய்யப்பட்ட படுகொலை இது என்று இயக்குநர் கௌதமன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: அரியலூர் அனிதாவை மத்திய, மாநில அரசுகள் படுகொலை செய்யப்பட்டுவிட்டது என்று இயக்குநர் கௌதமன் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

மருத்துவ கனவு தகர்ந்ததால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இயக்குநர் கௌதமன் கூறுகையில், அனிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை. மத்திய அரசும், மாநில அரசும் அனிதாவை படுகொலை செய்துவிட்டன.

Central and State government assasinated Anitha, says Director Gowthaman

தாயை காப்பாற்ற முடியாத நிலையில் மருத்துவம் படித்தே ஆக வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்தவர் அனிதா. அவர் தற்போது இல்லாமல் செய்துவிட்டனர்.

அனிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த செல்கிறேன். மத்திய- மாநில அரசுகள் அவரது உடலை அடக்கம் செய்ய அவசரம் காட்டி வருகின்றன. ஜல்லிக்கட்டை போல் நீட் தேர்வுக்கு இளைஞர்கள் போராட வேண்டியது அவசியமாகும்.

தமிழர்கள் மருத்துவர்கள் ஆகக் கூடாது என்று மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. இன்னும் சில நாள்களில் நீதிபதி, வழக்கறிஞர், பொறியாளர் ஆகியோர் அனைவரும் தமிழர்கள் இல்லாத சூழலுக்கு மத்திய அரசு தள்ளும் நிலை விரைவில் வரும்.

Recommended Video

    இறந்து போன நீட் போராளி அனிதா-வீடியோ

    காவிரி டெல்டா பகுதிகளை அழிவிட்டது. மண்ணை அழித்து கல்வி, வேலை வாய்ப்புகளை பறித்துவிட்டு தமிழர்களை பிச்சைக்காரர்களாக்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டது.

    தங்கள் சுயலாபத்துக்காக தமிழக அரசு மண்டியிட்டு மானங்கெட்ட செயல்களில் ஈடுபடுகிறது. முள்ளிவாய்க்கால் போல் விரைவில் தமிழினம் அழியும் நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.

    English summary
    Director Gowthaman says that Ariyalur Anitha was assasinated by Central and State government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X