பெரியாரின் கொள்கையையே ஒப்புக் கொள்ளாதவர்கள் கமல் ஹாஸனை ஒப்புக் கொள்வார்களா?- சாரு ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியாரின் கொள்கைகளையே ஒப்புக் கொள்ளாதவர்கள் கமல் ஹாஸனை ஒப்புக் கொள்வார்களா? என்று கேட்டுள்ளார் கமலின் அண்ணன் சாருஹாஸன்.

சமீப நாட்களாக அரசுக்கு எதிராக கருத்துக்கள் சொல்லி வரும் கமல் ஹாஸன், இப்போது அரசை எதிர்த்து களமிறங்க ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். கமல் அரசியல் குறித்து பல தரப்பும் வாதப் பிரதிவாதங்களில் இறங்கியுள்ளன.

Chaaru Haasan's comment on Kamal's politics

இந்த நிலையில் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் அரசுக்கு எதிரான கமலின் நிலைப்பாடு குறித்தும், அவரின் அரசியல் பிரவேசம்? குறித்தும் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது நல்லதுதான். ஆனால் அவர் வந்து யாரையும் திருத்த முடியாது. ஏனெனில் தமிழக மக்கள் ஒரு பெரியாரின் கொள்கையையே ஒப்புக்கொள்ளாதவர்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal Haasan's Brother Chaaru Haasan has commented that Kamal couldn;t change anything in politics
Please Wait while comments are loading...