சேப்பாக்கத்தில் தொடக்கத்தில் வெறிச்... மெது மெதுவாக நிரம்பிய இருக்கைகள்

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகளின் தொடக்கத்தின் போது இருக்கைகள் காலியாக இருந்தன. பின்னர் கணிசமான கூட்டத்தால் இருக்கைகள் நிரம்பின.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அண்ணா சாலை முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள, வீரர்கள் மைதானத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் பெரும்பாலானோர் மைதானத்தில் டிக்கெட்டுகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் ரசிகர்கள் மைதானத்துக்குள் சென்றனர்.
போட்டியின் தொடக்கத்தில் மைதானத்தில் சில நூறு பேர் மட்டுமே அமர்ந்தனர். 40 ஆயிரம் பேர் வரை அமரும் மைதானத்தில் சில நூறு பேர் மட்டுமே இருந்ததால் ஐபிஎல் நிர்வாகம் அதிர்ச்சியானது. ஆனால் அண்ணாசாலை போராட்டம் முடிவடைந்த பின்னர் கணிசமான அளவுக்கு இருக்கைகள் நிரம்பின.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!