For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதக்கலவரத்தை தூண்டும் முயற்சி.. எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய ஹைகோர்ட் உத்தரவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: இருவேறு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் அறிக்கை வெளியிட்ட குற்றச்சாட்டு குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அவ்வப்போது பிற மத்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருபவர், எச்.ராஜா. இவர் ராமநாதபுரம் அஸ்வின்குமார் வீட்டில் நடைபெற்ற தாக்குதல் குறித்து, வெளியிட்ட ஒரு அறிக்கை, இரு மதப் பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுவதாக இருப்பதாக இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரகீம் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Chennai High court direct police to register case against H.Raja

இதை விசாரித்த ஹைகோர்ட், எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. புகாருக்கு முகாந்திரம் இருந்தால் சட்டத்திற்கு உட்பட்டு வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவல்லிக்கேணி காவல்துறை இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ள ஹைகோர்ட், வழக்கை முடித்து வைத்துள்ளது.

English summary
Chennai High court direct police to register case against H.Raja for provoking comment in a press release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X