சென்னை - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் லேட்!
சென்னை- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையிலிருந்து கோவைக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து கோவைக்கு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரலில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுவது வழக்கம். இந்நிலையில் அதன் இணைப்பு ரயில் தாமதமாக வருவதால் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி ரயிலானது மாலை 5.45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும்.












Click it and Unblock the Notifications