சென்னையில் பரபரப்பு.. தம்பி மனைவியுடன் செல்ஃபி எடுத்த அண்ணனை ஆத்திரத்தில் போட்டுத் தள்ளிய தம்பி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மனைவியுடன் எடுத்த செல்ஃபியை மது விருந்தின் போது தன்னிடமே அண்ணன் காட்டியதால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்துள்ளார் தம்பி.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் குட்டிகிராமணி 1வது தெருவில் தனது மனைவி விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார் 33 வயது புலேந்திரன். இவரது அண்ணன் ராஜேந்திரன் மும்பையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 4 மாதங்கள் முன்பு பணி மாறுதல் கிடைத்து சிதம்பரம் வந்துள்ள ராஜேந்திரனின் மனைவி சுஜாதா மும்பையில் வசித்து வருகிறார். ராஜேந்திரன் மற்றும் புலேந்திரனின் கடைசி தம்பி வெங்கட்ரமணா தனது மனைவி பாவனாவுடன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

 விடுப்பில் வந்தவர்

விடுப்பில் வந்தவர்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் வெங்கட்ரமணா 20 நாட்கள் விடுப்பில் சென்னை வந்துள்ளார். சில நாட்களாக மூத்த தம்பி புலேந்திரன் வீட்டில் தங்கி இருந்துள்ளார் ராஜேந்திரன்.

 மது விருந்து

மது விருந்து

இந்நிலையில் நேற்று இரவு கடைசி தம்பி வெங்கட்ரமணா அழைத்தன் பேரில் அண்ணன், தம்பிகள் மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ராஜேந்திரன், வெங்கட்ரமணாவின் மனைவி பாவனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெங்கட்ரமணா செல்போனிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

 செல்ஃபியை அனுப்பியதால் வந்த எமன்

செல்ஃபியை அனுப்பியதால் வந்த எமன்

மனைவியுடன் அண்ணன் இருக்கும் செல்ஃபியை பார்த்ததும் வெங்கட்ரமணா ஆத்திரத்தில் அண்ணன் ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கைகலப்பு ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்த கத்தியை எடுத்து ராஜேந்திரனை, வெங்கட்ரமணா குத்திக் கொலை செய்துள்ளார்.

 கைது, விசாரணை

கைது, விசாரணை

இதனையடுத்து அபிராமபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திராவின் உடலைக் கைப்பற்றி, வெங்கட்ரமணாவை கைது செய்துள்ளனர். கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 காரணம் என்ன?

காரணம் என்ன?

சொத்துப் பிரச்னை காரணமாக இந்தக் கொலை திட்டமிட்டே நடத்தப்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அல்லது மனைவியுடன் அண்ணன் நெருங்கிப் பழகுவது பிடிக்காமல் ஆத்திரத்தில் நடந்த கொலையா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai youth killed elder brother as he sent the selfie of his wife's photo with him in a drunken party
Please Wait while comments are loading...