ஓ காட்.. சென்னையில் மழை குறையும்.. ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யுமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது.

பல இடங்களில் மழை நீர்

பல இடங்களில் மழை நீர்

நேற்று பகல் நேரத்தில் விட்டிருந்த மழை இரவு மீண்டும் வெளுத்தது. இதனால் சென்னையின் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரின் பல பகுதிகளிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் மழை குறையும்

சென்னையில் மழை குறையும்

பெரம்பூர் பின்னிமில் பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேகமூட்டத்துடன் காணப்படும்

மேகமூட்டத்துடன் காணப்படும்

சென்னையில் ஓரிரு இடங்களில் மட்டுமே இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Chennai meteorological center said Rain will reduce in Chennai. In Chennai some places only will thunderstorm.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X