சென்னை போலீஸ் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு- எஸ்.வி.சேகர் எங்கே?
நடிகர் எஸ்வி சேகர் எங்கே என போலீஸ் தேடி வருகிறது.
சென்னை: பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது எஸ்.வி. சேகர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை.
பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தட்டியது சர்ச்சையானது. இச்சம்பவம் தொடர்பாக திருமலை என்பவர் ஃபேஸ்புக்கில் மிக மோசமாக பதிவிட்டிருந்தார்.

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் இந்த பதிவை நடிகர் எஸ்.வி.சேகரும் தம்முடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் இப்பதிவை நீக்கிய எஸ்.வி.சேகர், மன்னிப்பு கேட்டார்.
இவ்விவகாரம் குறித்து எஸ்.வி.சேகர் மீது போலீசில் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. தற்போது எஸ்.வி.சேகர் அவர் வீட்டில் இல்லை என்றும் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வரவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே எஸ்.வி.சேகர் வீடு மீது தாக்குதல் நடத்தியதாக 30 பத்திரிகையாளர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications