இந்தியா - பாகிஸ்தான் பைனல் மேட்ச்: வெறிச்சோடிய சென்னை சாலைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா - பாகிஸ்தான் பைனல் மேட்சை முன்னிட்டு சென்னையின் பெரும்பாலான சாலைகள் பிற்பகலுக்குப் பிறகு வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமாக மக்கள் கூடும் மால்கள் மற்றும் தியேட்டர்களிலும் கூட்டம் பெருமளவு குறைந்திருந்தது.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்புக்கு பஞ்சமில்லால் நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

chennai roads are visible as empty due to india pakistan cricket match

இதனை தொலைக்காட்சி வாயிலாக கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்தியாவை பொறுத்தளவில் கிரிக்கெட்டை பார்க்காதவர்கள் கூட இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் டிவி முன்பு உட்கார்ந்து விடுவர்.

அதிலும் இது இறுதிப் போட்டு வேறு. சொல்லவா வேண்டும்? இந்தியா முழுவதுமே பாகிஸ்தானுடனான போட்டியை பார்த்த வருகின்றனர்.

சென்னையிலும் கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை டிவியின் முன்பு அமர்ந்து விட்டார்கள் போல. பிற்பகலுக்குப் பிறகு மக்கள் கூடும் இடங்களில் கூட்டம் குறைந்தே இருந்தது.

அதேபோல் சென்னையின் பல இடங்களிலும் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தியேட்டர், மால் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
chennai roads are visible as empty due to india pakistan cricket match. Traffic jam also very less in the area where heavy traffic jam occures.
Please Wait while comments are loading...