வெயிலு அடிக்குதுன்னு சந்தோஷப்படாதீங்க மக்கா...இன்னைக்கு ராத்திரியும் "கச்சேரி" இருக்குதாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் இன்று காலை முதல் மழை ஓய்வெடுத்துக் கொண்டு வெயில் சற்று தலை காட்டியது. ஆனால் இந்த ரெஸ்ட் நைட்டு பிச்சு வாங்க போகும் மழைக்காகத் தான் என்று எச்சரிக்கையும் விடப்படுகிறது.

சென்னையில் நேற்று காலை முதல் சுள்ளென்று வெயில் மண்டையைப் பிளந்தது. இதனால் சென்னை மக்கள் மழை ஓய்ந்து விட்டது என்று நிம்மதியடைந்தனர். ஆனால் 3 மணியளவில் லேசான தூரலுடன் மழை தொடங்கியது. ஆனால் நேரமாக நேரமாக மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது.

 Chennai will get rain at today night too

கிட்டதட்ட 18, 19, 20த் தாண்டி 30 செ.மீட்டர் வரை மழை ஒருகை பார்த்துவிட்டது. இதனையடுத்து இன்று அதிகாலையில் ஓய்ந்த மழை காலையில் தூரல் மட்டும் போட்டு விட்டு சென்றது. காலை 10 மணிக்குப் பிறகு வெளில் தலைகாட்டி சற்று முன்னர் வரை மஞ்சள் வானமாக இருந்தது தற்போது மீண்டும் இருட்டிக் கொண்டு வரத் தொடங்கியுள்ளது.

பேருந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தாலும் சென்னை விமான நிலையத்தில் இதுவரை மழை பாதிப்பு எதுவும் இல்லாததால் வழக்கம் போல விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நிலவுவதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே இன்று இரவும் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

ஏற்கனவே தண்ணீர் காடாக காட்சியளிக்கும் சென்னையின் தாழ்வான பகுதிகள் இன்று இரவும் மழை பெய்தால் என்ன நிலைமைக்கு ஆகுமோ என்ற பயம் நிலவுகிறது. எனினும் அலுவலகம் சென்றிருக்கும் மக்களே எதற்கும் முன்எச்சரிக்கையாக முன்கூட்டியே வீடு திரும்புவது நல்லது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai to see break in rains in day and rains will be back at Night. The break in rains will give the breathing time to drain the stagnant water says Tamilnadu weatherman Pradheep john.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற