5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வழிமுறைகள்.. பள்ளிக் கல்வித்துறை வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் அரசு அறிவித்தது. இதற்காக அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது.

classes 5 and 8 public exam: tamil nadu school education department released important instructions

இந்நிலையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

5 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு மையம் 1 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாக இருக்க வேண்டும்.

8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு மையம் 3 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாகவும் இருக்க வேண்டும்.

5 ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்.

8 ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் என 5 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்.

மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் மாநில பாடத்திட்டத்தின் முப்பருவ முறையை பின்பற்றப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+