தஞ்சை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூர் அருகே அரசுப் போருந்து மினி லாரியும் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

திருப்பூரில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பஸ்சும், தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மினி லாரியும் வல்லம் மேம்பாலம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் அரசு பஸ் டிரைவர், மற்றும் மினிலாரி டிரைவர் உட்பட 10 பேர் பலியாயினர்.

CM announced fund for those who died at Thanjavur accident

பஸ்சில் 60 பேர் பயணம் செய்துள்ளதாகவும், இவர்களில் காயம் அடைந்த 23 பேர் கிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சையில் நடந்த விபத்தில் 10 பேர் பலியான சம்பவத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும், காயமடைந்த 23 பேருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu CM announced fund for the died victims family.
Please Wait while comments are loading...