முதல்வர் 10ம் தேதி டெல்லி பயணம்.. துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவியேற்கும் விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 10ம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

துணை ஜனாதிபதி தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. அதில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். அதில் வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்றார்.

CM Palanisamy visits Delhi

இதனையடுத்து வரும் 11ம் தேதி வெங்கய்ய நாயுடு துணை ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார். அதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 10ம் தேதி டெல்லிக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

OPS Supporters Protest Against TN C.M, Edapadi Palanisamy- Oneindia Tamil

நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் பழனிச்சாமி, நீட் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை குறித்தெல்லாம் பிரதமரைச் சந்தித்து முறையிடுவாரா என்ற எதிர்ப்பு தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Chief Minister Palanisamy will visit Delhi on August 10.
Please Wait while comments are loading...