ஜல்லிக்கட்டு போராட்டம் - காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தை எழுப்பியதால் பிரச்சனை- ஓபிஎஸ்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஓசாமா பின்லேடன் படத்துடன் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: மெரீனா கடற்கரையில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை சமூக விரோதிகள் திசை மாற்றினர். காவிரி முல்லைபெரியாறு பிரச்சினை தொடர்பாகவும் முழக்கமிட்டனர் என்றும் சட்டசபையில் ஒ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி ஜனவரி 16ஆம் தேதி முதல் அலங்காநல்லூர் தொடங்கி சென்னை மெரீனா கடற்கரை வரை ஒரு வாரம் போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 23ஆம் தேதியன்று மாணவர்கள், இளைஞர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப்பின்னர் இன்றுசட்டசபை கூடியது. இந்த நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்திய ஏன் என்று திமுக செயல்தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் இன்று கேள்வி எழுப்பினார். சென்னை வன்முறை குறித்தும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனையடுத்து சட்டசபையில் பேசிய முதல்வர், அலங்காநல்லூரில் ஜனவரி 16ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட மறுத்த பின்னரே கைது செய்யப்பட்டனர்.
திமுக ஆட்சியில் இருந்த போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில் இருந்து பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மெரீனா கடற்கரையில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை சமூக விரோதிகள் திசை மாற்றினர். காவிரி முல்லைபெரியாறு பிரச்சினை தொடர்பாகவும் முழக்கமிட்டனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்துடன் போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர். இந்த போட்டோ ஆதாரங்கள் சட்டசபை சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
அமைதியான போராட்டத்தில் கடைசி இரண்டு நாட்கள் சமூக விரோத கும்பல் ஊடுருவி திசை திருப்பியது. இதனயைடுத்தே போராட்டக்காரர்கள் கடற்கரையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
மெரீனா கடற்கரை செல்லும் சாலைகள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. தடுப்பு வேலியை தாண்டியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன. 60க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். இதன் பின்னரே தடியடி நடத்தப்பட்டது என்று சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications