Breaking News Live: மாணவிகளை உல்லாசமாக இருக்க அழைத்த விடுதி உரிமையாளர் மர்ம மரணம்
மாணவிகளை உல்லாசமாக இருக்க அழைத்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் மர்ம மரணம் அடைந்துள்ளார்.
Tamilnadu
oi-Vishnupriya
By Lakshmi Priya
Subscribe to Oneindia Tamil
கோவை: மாணவிகளை உல்லாசமாக இருக்க அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கோவை விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் திடீர் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு பாலரங்கநாதபுரத்தில் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. இங்கு கல்லூரி மாணவிகள், வேலை செய்யும் இளம் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இவர்களை விடுதி உரிமையாளர் ஜெகந்நாதனும், விடுதி காப்பாளர் புனிதாவும் பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக மாணவிகள் புகார் அளித்தனர். இதன் பேரில் தலைமறைவாக உள்ள இருவரையும் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Recommended Video
கோவை விடுதி உரிமையாளர் கிணற்றில் சடலமாக மீட்பு- வீடியோ
இந்த நிலையில் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஜெகந்நாதன் சடலமாக மீட்கப்பட்டார். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை இவருக்கு பின்னால் இயங்கும் முக்கிய புள்ளிகள் யாரேனும் பாதுகாப்புக்காக இவரை கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசிவிட்டனரா என்று போலீஸார் விசாரிக்கின்றனர்.
Jul 26, 2018, 7:46 pm IST
கருணாநிதிக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று காரணமாக காய்ச்சல்- காவிரி மருத்துவமனை
24 மணி நேரமும் மருத்துவ குழு கண்காணிப்பில் கருணாநிதி உள்ளார்
மருத்துவமனைக்கு ஈடான மருத்துவ வசதிகள் கருணாநிதி வீட்டில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது
காவிரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல்
Jul 26, 2018, 5:20 pm IST
சென்னையில் வெப்பசலனம் காரணமாக மழை
வளசரவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் மழை
முகப்பேர், பல்லாவரம் ஆகிய பகுதிகளிலும் லேசான மழை
Jul 26, 2018, 5:02 pm IST
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி
பன்னீர்செல்வம் பதவி விலக தமிழகம் வழிமொழிவது எனக்கு மகிழ்ச்சி-கமல்ஹாசன்
இந்த அரசே நீங்க வேண்டும் என்று நான் சொல்லி ரொம்ப நாள் ஆகிவிட்டது-கமல்ஹாசன்
Jul 26, 2018, 4:54 pm IST
மத்திய அமைச்சர் சத்யபால் ராஜ்யசபாவில் நீட் தேர்வு குறித்து தகவல்
நீட் தேர்வு ஆண்டுக்கு 2 முறை கணினி மூலம் நடத்தப்படும்
நீட் தேர்வை கணினி மூலம் தேசிய தேர்வு முகமை நடத்தும்
Jul 26, 2018, 4:54 pm IST
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி
Jul 26, 2018, 3:59 pm IST
தமிழகத்தில் வாடகை குடியிருப்பு சொத்து வரி குறைப்பு
100 சதவீதமாக உயர்த்தப்பட்ட சொத்து வரி 50 சதவீதமாக குறைப்பு
Jul 26, 2018, 3:59 pm IST
ஆபத்து கருதி நிர்மலா சீதாராமன் ஓபிஎஸ்ஸுகு உதவியது சரி: இல.கணேசன்
இந்திய அளவில் மோடி தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டார்
தமிழகத்தில் மாநாடு நடத்தி பாஜகவும் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது
Jul 26, 2018, 2:40 pm IST
சென்னையில் வெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவு
வருங்காலங்களில் மாலை மற்றும் இரவில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு
காவிரி நீர் பிடிப்புகளில் மழை குறைந்தவுடன் மேட்டூருக்கு வரும் நீர்வரத்தும் குறையும்
Jul 26, 2018, 2:27 pm IST
மேற்கு வங்க மாநிலம் பெயரை 'பாங்ளா' என மாற்றி சட்டசபையில் தீர்மானம்
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தீர்மானம் அனுப்பி வைப்பு
Jul 26, 2018, 12:01 pm IST
டெல்லியில் நடிகை குஷ்பூ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு
அதிமுக அரசால் தமிழகத்துக்கு எதுவும் முன்னேற்றம் கிடையாது: குஷ்பூ
துணை முதல்வரை சந்திக்க மறுத்ததைவிட வேறு என்ன அவமானம்
ஓபிஎஸ் சகோதரருக்கு செய்ததுபோல சராசரி மனிதர்களுக்கும் உதவி செய்வார்களா?
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதையே விரும்புகிறோம்
இன்று மோடியின் புகழ் பாதியாக குறைந்திருக்கிறது: குஷ்பூ விமர்சனம்
காங்கிரஸ் திமுக கூட்டணி நீடிக்க வேண்டும் என விருப்பம்
Jul 26, 2018, 11:21 am IST
சாக்லேட் திருடிய பெண் காவலர் சஸ்பெண்ட்
வேப்பேரி காவல் நிலைய காவலர் நந்தினி நீல்கிரிஸ் கடையில் திருட்டு
சாக்லேட், ஓடோமாஸ் திருடிய வீடியோ வைரலானதை அடுத்து போலீஸ் நடவடிக்கை
Jul 26, 2018, 11:08 am IST
சென்னை விமான நிலையத்தில் டிடிவி தினகரன் பேட்டி
நிர்மலா சீதாராமன் செயல்பாடு சரியில்லை
மக்களை முட்டாள்கள் என நினைத்தால் தேர்தலில் அது எதிரொலிக்கும்-தினகரன்
Jul 26, 2018, 10:51 am IST
சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள ஒமேகா பள்ளியில் பாலியல் தொந்தரவு
பள்ளி வேன் அட்டன்டர்கள் பாலியல் தொல்லை தருவதாக பெற்றோர் பள்ளியை முற்றுகை