காதல், திருமணமாக மாறுவது போல் தோழமை கூட்டணியாக மாறும்.. சொல்கிறார் துரைமுருகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  துணைவேந்தர் பதவிக்கு பணம்- துரை முருகன் சாடல்- வீடியோ

  சென்னை: காதல் திருமணமாக மாறுவது போல் தோழமை கூட்டணியாக மாறும் என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தோழமையாக உள்ளன. இந்தக்கட்சிகள் அனைத்தும் தமிழக அரசு பாஜகவின் பினாமி அரசாக உள்ளது என குற்றம்சாட்டி வருகின்றன.

  தமிழகத்தில் பாஜகதான் மறைமுக ஆட்சி செய்கிறது என்று குற்றம்சாட்டி வருகின்றனர். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அனைத்துக்கட்சிகள் ஆதரவு தெரிவிக்க திமுக போட்டியிட்டது.

  கூட்டணியாக மாறுமா?

  கூட்டணியாக மாறுமா?

  ஆனால் டெபாசிட் கூட பெறமுடியாமல் படுதோல்வியை சந்தித்தது திமுக. இந்தகட்சிகளின் தோழமை நடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணியாக மாறுமா என்ற கேள்வி எழுந்தது.

  தோழமை கூட்டணியாக மாறும்

  தோழமை கூட்டணியாக மாறும்

  இந்நிலையில் தோழமை கூட்டணியாக மாறும் என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
  புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னீப்பரிட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

  துரைமுருகன் பங்கேற்பு

  துரைமுருகன் பங்கேற்பு

  இன்று இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகும் அந்நிகழ்ச்சியின் முன்னோட்டம் ஒளிப்பரப்பட்டு வருகிறது. இதில் திமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான துரைமுருகன் பங்கேற்றுள்ளார்.

  கலைத்துவிடாதீர்கள்

  கலைத்துவிடாதீர்கள்

  நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் துரைமுருகன் காதல் திருமணமாக மாறுவதுபோல் தோழமை கூட்டணியாக மாறும் என தெரிவித்தார். மேலும் நீங்கள் இப்போதே கலைத்துவிடாதீர்கள் என்றும் நெறியாளரிடம் அவர் கூறினார்.

  வந்திருக்கிறார், வாங்க

  வந்திருக்கிறார், வாங்க

  வைகோ குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் துரைமுருகன் நாங்களா அவரை கூப்பிட்டோம், வந்திருக்கிறார் வாங்க என்கிறோம் என்றார்.

  குதிக்கும்போதுதான் தெரியும்

  குதிக்கும்போதுதான் தெரியும்

  மேலும் ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் அவர் குதிக்கிறேன் குதிக்கிறேன் என்கிறார்கள், குதிக்கும்போதுதான் தெரியும் நேரடியாக குதிக்கிறார்களா அல்லது பல்டியடித்து குதிக்கிறார்களா என்று துரைமுருகன் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Former DMK minister Duraimurugan has said that the companionship will become alliance like love becmoes marriage. Duraimurugan said this in a TV show.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற