தானம் செய்த ரத்தம் விற்பனை... சேலம் கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர் மீது போலீசில் புகார்!
தான முகாம் மூலம் கிடைத்த ரத்தத்தை விற்பனை செய்ததாக சேலம் கமல் நற்பணிமன்ற பொறுப்பாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் : தான முகாம் மூலம் கிடைத்த ரத்தத்தை விற்பனை செய்ததாக சேலம் கமல் நற்பணிமன்ற பொறுப்பாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட கமல் நற்பணிமன்ற பொறுப்பாளர் பாலச்சந்திரன் மீது முன்னாள் நிர்வாகி சண்முகசுந்தரம் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார்.
நடிகர்களின் பிறந்தநாள், திரைப்பட வெற்றி உள்ளிட்டவற்றை கொண்டாடுவதற்காக மாவட்ட தோறும் இருக்கும் ரசிகர் மன்றத்தினர் மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதே போன்று சேலம் மாவட்ட கமல் நற்பணி மன்றத்தினரும் அண்மையில் ரத்த தான முகாம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ரத்த தானம் கொடுப்பது நல்ல விஷயம் தான் என்பதால் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து ரத்தத்தை கொடையாக அளித்துவிட்டு சென்றனர். இந்நிலையில் சேலம் கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர் பாலச்சந்திரன் என்பவர் ரத்ததானத்தில் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை பணத்திற்காக விற்பனை செய்துள்ளதாக சக நிர்வாகியே குற்றம் சாட்டியுள்ளார்.
வெறும் குற்றச்சாட்டோடு நின்று விடாமல் பாலச்சந்திரன் மீது சேலம் மாவட்ட காவல்துறையினரிடம் முன்னாள் நிர்வாகி சண்முக சுந்தரம் புகார் அளித்துள்ளார். கமல் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில்,ரசிகர் மன்ற பொறுப்பிற்காக இந்த புகாரை சண்முக சுந்தரம் தெரிவித்தாரா அல்லது புகாரில் உண்மையிலேயே முகாந்திரம் இருக்கிறதா என்றெல்லாம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications