தேமுதிக வ.செ. முதுகில் கடித்து விளையாடிய காங்கிரஸ்காரர்!
புதுக்கோட்டை: தேமுதிகவைச் சேர்ந்த வட்டச் செயலாளர் அலெக்ஸ் என்பவருடன் ஏற்பட்ட மோதலில் அவரது முதுகில் பலமாக கடித்து விட்டார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வம் என்பவர். இதில் அலெக்ஸ் முதுகில் பல் பதிந்து காயமாகி விட்டது.
அவரைக் கொண்டு போய் தற்போது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குப்புராமு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசாரம் செய்ய வருவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கூட்டணிக் கட்சியான தேமுதிக வட்ட செயலாளர் அலெக்ஸ் என்பவர், களப்பக்காடு பகுதியில் பாரதிய ஜனதா மற்றும் தேமுதிக கொடி தோரணங்களை கட்சியினருடன் சேர்ந்து கட்டினார்.
இதற்கு அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் செல்வம் மற்றும் பிரகாஷ் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 2 தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சண்டை அடிதடியானது. அப்போது செல்வம் அலெக்சை தாக்கி முதுகில் கடித்து விட்டார்.
பதிலுக்கு செல்வம் மற்றும் பிரகாஷை தேமுதிகவினர் அடித்து விட்டனர். இரு தரப்பும் காயமடைந்தது. முதுகில் காயமடைந்த அலெக்ஸை வேட்பாளர் குப்புராமு மருத்துவமனையில் வந்து ச்ந்தித்து நலம் விசாரித்தார்.
முன்னாடியெல்லாம் அடிச்சுக்குவாங்க.. இப்ப கடிக்கவே ஆரம்பிச்சு்டடாங்களே.. அரசியல் ரொம்பத்தான் சூடாயிருச்சு போல.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications